Thursday, 8 June 2023

அருள்மிகு காரைச் சித்தர் கூறிச் சென்ற கலியுக அதர்மம் !

தெய்வமெல்லாம் விண்ணாடிப் போகும் போகும்..

தீமையெலாம் மண்ணகத்தில் தெருக்கூத்தாடும்.. 

தெய்வங்கள் மறையும், 

தீமைகள் பரவும்..

உய்யுமுண்மை உளத்துண்மை ஓடிப்போகும்..

உலக உண்மை விஞ்ஞானம் கூடிவேகும்.

+ வேதம் விபரீத நிலை அடையும்.

+சாத்திரம் சக்தி இழந்து விடும்.

+தர்மம் தலை குனிந்து நிற்கும்.

+ அதர்மம் ஆதிக்கம் செய்யும். 

+ சத்தியம் சாகும் நிலை அடையும்.

+அசத்தியம் ஆட்சி பீடத்தில் அமரும்.

+ நீதி நிதிக்குள் ஒடுங்கி நிலை குலையும்.

+ உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும்.

+ பொய்யை மெய் மெய் என்று புகழப்படும்.

+ ஆசாரம் அற்ற அர்ச்சகர்கள் அதிகரித்து விடுவார்கள்.

+ ஆலயங்களில் அறநெறி தவறி அசம்பாவிதங்கள் பெருகிவிடும்.

+சீர் திருத்தம் என்ற பெயரில் சீர்கேடுகள் அதிகரிக்கும்.

+பாமரர்கள் தேர்ந்தெடுத்த பாதகர்கள் அரசாள்வார்கள்.

+ ஜாதிமதக் கலப்படம் அதிகரிக்கும்.

+கொலை, களவு, கற்பழித்தல் அதிகரிக்கும்.

+ ஆசிரியர்கள் வழி நிற்காத மாணவர்கள் அதிகரிப்பார்கள். 

+ இது அகால மரணம் உண்டாக்கும் என்று அறிந்தும் வாகனம் ஓட்டி மரிப்பார்கள்.

+அறச்செயல் அரசியல் ஆகி அனாசாரம் பெருகும். 

+இயற்கை சீற்றத்தால் சீரழிவு உண்டாகும்.

" இறைவன் இருந்தும் இல்லாதவன் போல் இருப்பான் !"