Monday, 18 September 2023

ஆயிரத்தெண் விநாயகர்

        முதல் விநாயகர் கோவில் 

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆறுமுக மங்கலம் என்ற கிராமத்தில் தான் நமது தமிழகத்தில் முதன் முதலாக விநாயகர் கோவில் அமைக்கப்பட்டது என்று ஒரு வரலாற்றுச் செய்தி !

இந்த விநாயகரின் பெயர் வித்தியாசமான ஒன்று.
ஆயிரத்தெண் விநாயகர்.

சுமார் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

அந்தக் காலகட்டத்தில் அங்கு கொற்கையைத் தலைநகரமாகக்  கொண்டு ஆட்சி செய்த கோமார வல்லபன் என்ற பாண்டிய அரசன், நர்மதை நதிக்கரையிலிருந்து ஆயிரம் வேத பாண்டியர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான்.

இந்நிலையில் 999 பேர் மட்டுமே வந்திருந்தனர் . ஆயிரத்திற்கு ஒரு ஆள் குறையவே அரசன் தவித்துப் போனான் . 

தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற அவன் எப்போதும் விரும்பி வணங்கும் விநாயகரை மனதார வணங்கினான்.

அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி..‌
 விநாயகரே ஒரு வேத பண்டிதராக வடிவெடுத்து வந்து யாகம் நடத்த உதவியதால்,' "ஆயிரத்தெண் விநாயகர்" என்ற பெயர் பெற்றார்.
அதேபோல் மகான் ஆதிசங்கரர் தனக்கு ஏற்பட்டிருந்த வயிற்று வலி நீங்கத் திருச்செந்தூர் சென்று கொண்டு இருந்தவர், இங்கே வந்து இந்த ஆயிரத்தெண் விநாயகர் பெருமானைத் துதித்து ஸ்ரீ கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி.. அதன் பின் தான் திருச்செந்தூருக்குச் சென்று முருகன் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடித் தனது நோய் நீங்கப் பெற்றார் என்பதும் ஒரு முக்கியமான வரலாற்றுச் செய்தி .