கலியுக அதர்மம்
"தெய்வமெல்லாம் விண்ணாடிப் போகும் போகும்..
தீமையெலாம் மண்ணகத்தில் தெருக்கூத்தாடும்..
தெய்வங்கள் மறையும், தீமைகள் பரவும்..
உய்யுமுண்மை உளத்துண்மை ஓடிப்போகும்..
உலக உண்மை விஞ்ஞானம் கூடிவேகும் !"
-காரைச்சித்தர்.
வேதம் விபரீத நிலை அடையும். சாத்திரம் சக்தி இழந்து விடும்.
தர்மம் தலை குனிந்து நிற்கும். + அதர்மம் ஆதிக்கம் செய்யும்.
சத்தியம் சாகும் நிலை அடையும். அசத்தியம் ஆட்சி பீடத்தில் அமரும்.
நீதி நிதிக்குள் ஒடுங்கி நிலை குலையும்.
உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும். பொய்.. மெய் மெய் என்று புகழப்படும்.
ஆசாரம் அற்ற அர்ச்சகர்கள் அதிகரித்து விடுவார்கள். ஆலயங்களில் அறநெறி தவறி அசம்பாவிதங்கள் பெருகிவிடும்.
சீர் திருத்தம் என்ற பெயரில் சீர்கேடுகள் அதிகரிக்கும். பாமரர்கள் தேர்ந்தெடுத்த பாதகர்கள் அரசாள்வார்கள்.
ஜாதிமத கலப்படம் அதிகரிக்கும். கொலை, களவு, கற்பழித்தல் அதிகரிக்கும்.
ஆசிரியர்கள் வழி நிற்காத மாணவர்கள் அதிகரிப்பார்கள்.
இது அகால மரணம் உண்டாக்கும் என்று அறிந்தும்.. வாகனம் ஓட்டி மரிப்பார்கள்.
அறச்செயல் அரசியல் ஆகி அனாசாரம் பெருகும்.
இயற்கை சீற்றத்தால் சீரழிவு உண்டாகும்.
இறைவன் இருந்தும் இல்லாதவன் போல் இருப்பான் !
இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள சக்தி அளிக்க வேண்டும் என்று இறைவனிடம் துதிப்போம் அன்பு நண்பர்களே !
No comments:
Post a Comment