Saturday, 29 July 2023

குமாரஸ்தவம் காணொலி

https://youtu.be/Zz3UMta_2Os

குமாரஸ்தவம்

              குமாரஸ்தவம் !

ஸ்தவம் என்றால் ஒரு கடவுளின் உருவத்தை வர்ணிக்கும் ஒரு துதி.

அந்த வகையில் எம்பெருமான் முருகனின் உருவத்தை வர்ணித்து வணக்கத்துக்குரிய பாம்பன் சுவாமிகள் அருளியதே குமாரஸ்தவம்.

அதில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் வணக்கத்துக்குரிய திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் மற்றும் சில உண்மையான ஆன்மீகப் பெரியவர்களின்  சொற்பொழிவுகளைக் கேட்டுக் கேட்டு.. குமாரஸ்தவத்தின் தமிழாக்கத்தை இந்த எளியவள் எழுதினேன்.

அதையே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

படித்துப் பயன்பெறும் படியாக மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அன்பு நண்பர்களே! 

பிழை ஏதும் கண்டால் தயவுசெய்து தயங்காமல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

1.ஓம் ஷண்முக பதயே நமோ நம :

ஓம் ஆறுமுகம் கொண்ட தலைவனே வணக்கம் !

2.ஓம் ஷண்மத பதயே நமோ நம:

ஓம் ஆறு சமயங்களின் தலைவனே வணக்கம் !

3.ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:

ஓம் ஆறு திருக்கழுத்துகள்  கொண்ட தலைவனே வணக்கம் !

4.ஓம் ஷட்க்ரீட பதயேநமோ நம:

ஓம் ஆறு கிரீடங்களை அணிந்த தலைவனுக்கு வணக்கம் !

5.ஓம் ஷட்கோண பதயே நமோ நம:

ஓம் ஆறு கோணச் சக்கரத்தில் (சரவணபவ) எழுந்தருளியுள்ள தலைவனுக்கு வணக்கம் !

6.ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம!

ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம் !

7.ஓம் நவநிதி பதயே நமோ நம:

 ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம் !

( நவ நிதிகள் : பத்மராகம்.. மஹாபத்மம்.. சங்கம்.. மகரம்.. கச்சபம்.. முகுந்தம்.. நந்தம்.. நீலம்.. கர்வா .

Padmaraga (ruby) 

Mahapadma (lotus)

Shankha (conch)

Makara (crocodile)

Kacchapa (tortoise)

Mukunda (jasmine)

Nanda (delight)

Nila (sapphire) and

Kharva (innumerable).

8.ஓம் சுபநிதி பதயே நமோ நம:

ஓம் பேரின்பச் செல்வத்தின் (முக்தி) தலைவனுக்கு வணக்கம் !

9.ஓம் நரபதி பதயே நமோ நம:

ஓம் மனிதர்களில் அரசர்களாக இருப்பவர்களின் தலைவனுக்கு வணக்கம் !

10.ஓம் சுரபதி பதயே நமோ நம:

ஓம் தேவர்களின்  தலைவனுக்கு வணக்கம் !

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம:

ஓம் நடனமாடும் சிவனுக்கும் தலைவன் (அதாவது தந்தையாகிய சிவபெருமானுக்கே ப்ரணவப் பொருள் உரைத்து தகப்பன் சுவாமி) ஆனவனுக்கு வணக்கம் !

12.ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம :

ஓம் சரவணபவ எனும் ஆறு எழுத்துக்கள் (அட்சரம்) கொண்ட  தலைவனுக்கு வணக்கம் !

13.ஓம் கவிராஜ பதயே நமோ நம :

ஓம் கவிகளுக்கெல்லாம் தலைவனாகியவனுக்கு வணக்கம்! 

14 .ஓம் தபராஜ பதயே நமோ நம :

ஓம் தவம் செய்பவர்களுக்கு எல்லாம் தலைவனாகியவனுக்கு வணக்கம் !

15. ஓம் இகபர பதயே நமோ நம :

ஓம் இம்மையிலும் மறுமையிலும் இனிமையை நல்கும்  தலைவனுக்கு வணக்கம் !

16.ஓம் புகழ்முனி பதயே நமோ நம: 

ஓம் முனிவர்கள் அனைவரும் புகழும் தலைவனுக்கு வணக்கம் !

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :

ஓம் மிகுந்த வெற்றி உடைய தலைவனுக்கு வணக்கம் !

18. ஓம் நயநய பதயே நமோ நம :

ஓம் மிகுந்த நன்மைகளை அருளும் தலைவனுக்கு வணக்கம்! 

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :

ஓம் அழகே உருவான தலைவனுக்கு வணக்கம் !

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம :

ஓம் தெய்வயானை என்று அழைக்கப்படும் தெய்வகுஞ்சரியின் தலைவனுக்கு வணக்கம் !

(குஞ்சரம் என்றால் யானை என்று ஒரு பொருள் உண்டு).

21. ஓம் வல்லீ பதயே நமோ நம :

ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம் !

22. ஓம் மல்ல பதயே நமோ நம :

ஓம் மற்போர் செய்வதில் வல்லவனான தலைவனுக்கு வணக்கம் !

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :

ஓம் பலவிதமான கைவிடு படைக்கலன்களைக் (அஸ்த்ரங்களைக்) கையாள்வதில் திறமை பெற்ற தலைவனுக்கு வணக்கம் !

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :

ஓம் ஆயுதங்கள் மட்டுமின்றி அவற்றை மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் தலைவனுக்கு வணக்கம் !

(அதாவது படைக்கலனும் அதைப் பயன்படுத்தும் யுக்தியும் சேர்ந்தது சஸ்த்ரம் என்று விளக்கம் தந்தார் எனக்குத் தெரிந்த ஆன்மீகப் பெரியவர் ஒருவர்.)

25. ஓம் சஷ்டி பதயே நமோ நம :

ஓம்  சஷ்டியன்று பிறந்து அந்த நாளுக்குத் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :

ஓம் பூஜை மற்றும் யாகங்களின் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

பூஜைகளை, யாகங்களை விரும்பி ஏற்பவன் முருகப்பெருமான் என்றே இதற்குப் பொருள்.

( இஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதிப் பகுதியாகும். 

அதாவது, நான்காம் பாகமாகும். 

பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும்கூடிய காலம் இஷ்டி. இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜோதிட, ஆன்மிக நூல்கள் சொல்கின்றன. - நன்றி ஆனந்த விகடன்)

27. ஓம் அபேத பதயே நமோ நம :

ஓம் பேதமற்ற அதாவது வேற்றுமை கருதாத  தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

28. ஓம் சுபோத பதயே நமோ நம‌ :

ஓம் மெய்ஞானம் அருளும் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

29. ஓம் வ்யூஹ பதயே நமோ நம :

ஓம் சேனைகளை நடத்த வல்ல வழிகளை வகுக்கும் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

30. ஓம் மயூர பதயே நமோ நம :

ஓம் மயிலேறும் பெருமானுக்கு வணக்கங்கள் !

31.ஓம் பூத பதயே நமோ நம :

ஓம் பூத கணங்களின்  தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

32. ஓம் வேத பதயே நமோ நம :

ஓம் வேதங்களின் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

33. ஓம் புராண பதயே நமோ நம :

ஓம் புராணங்களின் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

34. ஓம் ப்ராண பதயே நமோ நம :

ஓம் எல்லா ஆன்மாக்களின் தலைவனாகவும் இருப்பவனுக்கு வணக்கம் !

35. ஓம் பக்த பதயே நமோ நம :

ஓம் உண்மையான பக்தி செலுத்தும் அடியார்களின் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

36. ஓம் முக்த பதயே நமோ நம :

ஓம் பாச பந்தங்களை விட்டுவிட்ட ஆன்மாக்களின் தலைவனாக இருப்பவனுக்கு வணக்கம் !

37. ஓம் அகார பதயே நமோ நம :

ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாக விளங்கும் தலைவனுக்கு வணக்கம் !

38. ஓம் உகார பதயே நமோ நம :

ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாக விளங்கும் தலைவனுக்கு வணக்கம் !

39. ஓம் மகார பதயே நமோ நம :

ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாக விளங்கும் தலைவனுக்கு வணக்கம் !

(இந்த இடத்தில் வியட்டிப் பிரணவம் குறித்து ஒரு சிறிய விளக்கம் - ஒரு முறை வணக்கத்துக்குரிய வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் கேட்டது - 

அகரம் முதலிய ஐந்தாக விரித்துக் கூறின் வியட்டிப் பிரணவம் எனப்படும். 

அதாவது அகர.. உகர.. மகர.. விந்து.. நாதம் (இந்த இடத்தில் "நாத விந்துகலாதி நமோ நம‌ " என்ற அருணகிரிப் பெருமான் வாக்கு நினைவு கூறத் தக்கது)

அகரம் அகங்காரத்தைச் செலுத்தும்.

உகரம் புத்தியைச் செலுத்தும். மகரம் மனத்தைச் செலுத்தும். விந்து சித்தத்தைச் செலுத்தும்.

நாதம் புருட தத்துவத்தைச் செலுத்தும்).

40. ஓம் விகாச பதயே நமோ நம :

ஓம் மலர்ந்த மலர் போன்ற முகம் கொண்ட தலைவனுக்கு வணக்கம்! 

41. ஓம் ஆதி பதயே நமோ நம :

ஓம் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கும் ‌தலைவனுக்கு வணக்கம் !

42.‌ ஓம் பூதி பதயே நமோ நம :

ஓம் ஞானத்தின் தலைவனுக்கு வணக்கம் !

43. ஓம் அமார பதயே நமோ நம :

ஓம் கிரீடங்களை அணிந்த தலைவனுக்கு வணக்கம் !

44. ஓம் குமார பதயே நமோ நம : 

ஓம் என்றும் இளைஞனாக இருக்கும்  தலைவனுக்கு வணக்கம் !தி

        திருமுருகப் பெருமானின் குமாரஸ்தவம் நிறைவு பெற்றது !

           +++++++++++++++
























1. ஓம் ஷண்முக பதயே நமோ நம: 

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம:

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:

4. ஓம் ஷட்க்ரீட பதயேநமோ நம:

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம:

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம:


7. ஓம் நவநிதி பதயே நமோ நம:

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம:

9. ஓம் நரபதி பதயே நமோ நம:

10. ஓம் சுரபதி பதயே நமோ நம:

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம:

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:


13. ஓம் கவிராஜ பதயே நமோ நம:

14. ஓம் தபராஜ பதயே நமோ நம:

15. ஓம் இகபர பதயே நமோ நம:

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம:

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம:

18. ஓம் நயநய பதயே நமோ நம:


19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம:

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:

21. ஓம் வல்லீ பதயே நமோ நம:

22. ஓம் மல்ல பதயே நமோ நம:

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:


25. ஓம் சஷ்டி பதயே நமோ நம:

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம:

27. ஓம் அபேத பதயே நமோ நம:

28. ஓம் சுபோத பதயே நமோ நம:

29. ஓம் வ்யூஹ பதயே நமோ நம:

30. ஓம் மயூர பதயே நமோ நம:


31. ஓம் பூத பதயே நமோ நம:

32. ஓம் வேத பதயே நமோ நம:

33. ஓம் புராண பதயே நமோ நம:

34. ஓம் ப்ராண பதயே நமோ நம:

35. ஓம் பக்த பதயே நமோ நம:

36. ஓம் முக்த பதயே நமோ நம:


37. ஓம் அகார பதயே நமோ நம:

38. ஓம் உகார பதயே நமோ நம:

39. ஓம் மகார பதயே நமோ நம:

40. ஓம் விகாச பதயே நமோ நம:

41. ஓம் ஆதி பதயே நமோ நம:

42. ஓம் பூதி பதயே நமோ நம:


43. ஓம் அமார பதயே நமோ நம:

44. ஓம் குமார பதயே நமோ நம: 

           +++++++++++++++

Wednesday, 5 July 2023

HOME MEDICINE

கத்தரிக்காய்
        கத்தரிக்காய் மருத்துவ குணங்கள் கொண்டது. இதய நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும்; வயிற்றுப்புண்களை ஆற்றும்; சிறுநீரகத்தைச் சரி செய்யும்.                   1.நான்கு அல்லது ஐந்து கத்தரிக்காயை அரைத்துப் பசையாக்கவும்.
2.சிறிது வெண்ணெயைச் சட்டியிலிட்டு இளக்கி, சில பற்கள் பூண்டு, சிறிது மிளகு, சிறிது பெருங்காயம், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின்னர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வர கத்தரிக்காயின் முழு மருத்துவப் பலன்களும் கிடைக்கும்.

              இஞ்சிக் குடிநீர்  

நான்கு பேருக்கு 150 ml.வீதம்: 

தேவையான பொருட்கள் :

1.இஞ்சி - 1 பத்தை
2.கொத்துமல்லி விதை - 6tbsp.
3.உலர் திராட்சை - 3tbsp.
4.வெல்லம் - தேவையான அளவு.
5.தண்ணீர் - 750மிலி.

செய்முறை:

1.இஞ்சியைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு
ஓட்டவும்.
பின் 1\2 டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் .

2.கொத்துமல்லி விதையை மிக்ஸியிலிட்டு சிறிது ஓட்டவும்; பின் உலர் திராட்சை சேர்த்து நன்கு ஓட்டவும்.

3.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 750மிலி.தண்ணீர் வைத்து வெல்லம் சேர்க்கவும் .

வெல்லம் கரைந்ததும் அரைத்து வைத்துள்ள மல்லி, திராட்சை கலவையை சேர்க்கவும். 2 நிமிஷம் கொதித்ததும் மேலாக தெளிவாக இருக்கும் இஞ்சிச்சாறைச் சேர்க்கவும்; 3 முறை பொங்கி வந்ததும் இறக்கி சற்று ஆறியதும் குடிக்கவும். 

தேவைப்பட்டால் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி மற்றும் வெல்லம் செரிமானம் நன்றாக நடப்பதற்கு உதவும். 
கொத்தமல்லி விதை பித்தம் போக்கும்.
உலர் திராட்சை மலம் எளிதாகக் கழிய உதவும்.

(எங்கள் வீடுகளில் பிறந்த குழந்தைக்குப் பதினாறு நாட்கள் கழிந்ததும் ஐந்து உலர் திராட்சைப் பழங்களை சுத்தமான ஒரு கிண்ணத்தில் போட்டுச் சிறிது வெந்நீரில் ஊற வைப்போம். 
குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு வந்ததும் உரை மருந்தைக் கொடுப்போம்.
அதன் பிறகு ஊற வைத்துள்ள உலர் திராட்சைப் பழங்களை நன்றாகக் கசக்கிச் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டிக் குழந்தைக்குச் சங்கில் வைத்துப் போட்டி விடுவோம்.
இதனால் குழந்தை எளிதாக மலம் கழித்து விடும். அதோடு நெஞ்சுச் சளியும் கட்டாது என்பது நாங்கள் கண்கூடாகக் கண்ட உண்மை.
அதேபோல் பிள்ளைகள் வளர்ந்த பின்னும் நாள்தோறும் விளக்கேற்றி வணங்கும் போது சுவாமிக்கு இந்த உலர் திராட்சைப் பழங்களைப் படைத்துச் சிறு குழந்தைகளைச் சாப்பிட வைத்து விடுவோம்.)

மாதம் இருமுறை காலையில் டீ, காஃபிக்குப் பதில் குடித்துவர வயிறு தொல்லையின்றி இருக்கும்.
               ++++++++++++
    ஐந்து மற்றும் எட்டு மருந்துப்பொடி

தேவையான பொருட்கள்:

1.சுக்கு-1பங்கு
2.மிளகு
3.திப்பிலி 
4.அக்கரா
5.சித்தரத்தை
6.சாரணவேர்
7.நறுக்குமூலம்
8.அதிமதுரம் 

சுக்கு தவிர மற்ற அனைத்தும் 1\2 பங்கு. அனைத்துப் பொருட்களையும் வெய்யிலில் நன்கு காயவைக்கவும். சுக்கு, சித்தரத்தை, சாரணவேர், அதிமதுரம் போன்றவற்றை சற்று தட்டியபின் மிக்ஸியிலிட்டு நன்கு அரைத்து, சலித்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

இதோடு, தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை , நொச்சி , துளசி ஆகியவற்றை ஒவ்வொரு  கைப்பிடி எடுத்து நன்கு சுத்தம் செய்யவும்.

நிழலில் உலர்த்திப் பொடித்து  மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி  பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். Plastic containerகளைத் தவிர்க்கவும் .   

காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும். 

( இதில் ஆடாதொடை போன்ற மூலிகைகள் கிடைக்கும்.. இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். சுக்கு முதலானவற்றைத் தயார் செய்து சாப்பிடலாம். முடியும் போது ஆடாதொடை போன்ற மூலிகைகளைத் தயார் செய்து சேர்த்துக் கொள்ளலாம். தயவுசெய்து கடைகளில் கிடைக்கும் ஆடாதொடைப் பொடிகள் வேண்டாம்)

சாப்பிடும் முறை :

தேவைப்படும்போது சிறுவர்க்கென்றால் ஒரு டீஸ்பூன், பெரியவர்க்கென்றால் ஒரு டேபிள்  டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிட்டுவர குளிர்காலத்தில் ஏற்படும் சாதாரண சளி, இருமல்,தும்மல் மற்றும் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது. 

குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றாற்போல் அளவைக் குறைத்து, தேனில் கலந்து கொடுக்கலாம்.

எல்லோரும் எப்போதும் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்: எல்லோருக்கும் எல்லாமும் ஒத்துக் கொள்ளாது. அதனால் சிறிதளவு செய்து பார்த்துப் பயன்படுத்தி உங்கள் உடலுக்கு ஒத்துக் கொண்டால் மேற்கொண்டு பயன்படுத்துங்கள் !

இல்லையேல் நிறுத்தி விட்டு.. சில காலம் கழித்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் !

பொதுவாக நமது வீடுகளில் நமது முன்னோர்கள் பின் பற்றிய மருத்துவ முறைகள் 90 - 95% பக்க மற்றும் பின் விளைவுகள் அற்றவையாகத் தான் இருக்கின்றன என்பது எங்கள் வாழ்க்கை அனுபவம் !                       ++++++++++++

சுக்கு மல்லி காஃபி

தேவையான பொருட்கள் :

சுக்கு - 1 பங்கு
கொத்தமல்லி விதை - 1 பங்கு
மிளகு - 1\2 பங்கு

மேலே சொன்னவற்றை நன்கு காய வைத்து, மிக்ஸியிலிட்டு நன்கு அரைத்து கண்ணாடி புட்டியில் வைத்துக்கொள்ளவும்.

தேவைப்படும்போது சில துண்டுகள் பனைவெல்லத்தை  (அவரவர் இனிப்புக்கு ஏற்ப) நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, அவை கரைந்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை - 1 நபருக்கு 1 டீஸ்பூன் வீதம் போடவும்: பொங்கிவரும். 3 முறை பொங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
சற்று ஆறியதும் பருகவும். வேண்டுமானால் பால் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பால் சேர்க்காமல் பருகினால் முழுப் பலனையும் பெறலாம். 

இந்தக் குடி நீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் - காஃபி, டீ போல தினமும் கூட குடிக்கலாம். 
நெஞ்சுச்சளி, வரட்டு இருமல் ஆகியவை போயே போய்விடும். 

நோயற்ற வாழ்வு வாழ நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
                      ++++++++++++++
குழந்தைகளுக்கு அதிகமாகக் காய்ச்சல் இருக்கும்போது முதலுதவியாக நல்ல குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து ஓரளவு நீரைப் பிழிந்துவிட்டு நெற்றியில் போடலாம். காய்ச்சல் குறையும். 
அதிகமாக சளியினால் குழந்தைகள் மூச்சுவிட அவதிப்படும்போது விபூதியை சிறிது நீர்விட்டுக் குழைத்து நெற்றியில், மூக்கில் பற்றுப்போட உள்ளே உள்ள நீர் உறிஞ்சப்பட்டு, குழந்தைகள் உறங்கத் துவங்கும்.