நம்ம நாட்டில் வீர மங்கைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீர மங்கையைப் விஷயத்தைத் தான் இந்தப் பதிவுல உங்களோடப் பகிர்ந்துக்கப் போறேன்.
கடந்த 14.02.2019ஆம்ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தது நினைவிருக்கிறதா நண்பர்களே ?
அதற்குப் பதிலடியாக 2019 பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி operation Bandar என்ற பெயரில் நமது இராணுவம் தீவிரவாதிகளின் இடங்களைக் கண்டுபிடித்து அழித்தது.
ஆனால் அந்த நடவடிக்கையில் பங்கேற்ற நமது வீரர்கள் நாலு பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
அவர்களில் ஒருவர் தான் வணக்கத்துக்குரிய மேஜர் விபூதி சங்கர் தௌண்டியால் என்னும் இளம் வீரர்.
தானே விரும்பி இந்த ஆபரேஷனில் பங்கேற்ற அவருக்கு எதிரிகளின் தாக்குதலால் கழுத்திலும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன.
Srinagar ல் உள்ள 92 base hospitalக்குக் கொண்டு போயும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில்.. “ நமது முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட வருகிறேன் “ என்று இந்தப் பரிதாப நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு முன்.. தன் 27 வயதே ஆன இளம் மனைவியான நிகிதா கௌலுக்கு மகிழ்ச்சியுடன் செய்தி அனுப்பினார்
ஆனால் அதற்கும் முன்பே அவரை வீர மரணம் அழைத்துக் கொண்டு விட்டது.
அவருடைய தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாக Shaurya Chakra விருது 2019ல் அளிக்கப்பட்டது.
ஆனால் அவருடைய தியாகம் வீண் போகவில்லை.
தன் கணவர் விட்டுச் சென்ற கடமையைத் தொடர நிகிதா கௌல் முடிவு செய்தார்.
ஆம்.. இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்த அந்த இளம்பெண் அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினார்.
கணவர் காலமாகி ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் Short Service Commission (SSC) நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.
மிகவும் கடினமான அந்தத் தேர்வுக்கு வயது வரம்பு பொதுவாக 20 - 27 ஆக இருந்தாலும் இராணுவத்தில் பணிபுரிந்த வீரர்களின் விதவை மனைவிகள் அதாவது (widows of defense personnel) 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
49 வாரங்கள் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தக் கோர்ஸில் தேறியவர்கள் 14 வருடங்கள் பாரத இராணுவத்தில் வேலை பார்க்கலாம். முதலில் 10 வருடங்கள் : தேவைப்பட்டால் அல்லது முடிந்தால் மேலும் 4 ஆண்டுகள் பணி புரியலாம்.
இராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்று ஒரு ஆழமான உத்வேகம் அதாவது aspiration கொண்டவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பை அளிக்கிறது.
அதோடு commissioned officers என்ற அதிகாரம் உள்ள உயர் பதவியில் இவர்கள் 10 ஆண்டுகள் பணியாற்ற முடியும்.
இந்த SSC தேர்வில் வெற்றி பெற்ற நிகிதா கௌல் Services Selection Board (SSB) interviewவிலும் 2020ல் தேறினார் : பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்தார்.
கடந்த 26.05.2021ல் Officers Training Academy படிப்பு மற்றும் பயிற்சியை முடித்தவருக்கு 29.05.2021ல் முறைப்படியான சான்றிதழ் சென்னை Officers Training Academy (OTA) மற்றும் பணிநியமன ஆணை அதாவது (she was formally commissioned) வழங்கப்பட்டது.
Army Commander.. Northern Command Lt Gen YK Joshi அவர்களே நிகிதாவின் தோள்பட்டையில் பணி நியமன அடையாளமாக நட்சத்திரங்களை அணிவித்த அந்தத் தருணம் இந்த இளம் பெண்ணுக்கு நிச்சயமாக ஒரு பெருமைமிகு தருணம் தான் !
பாரத இராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் துணிச்சல் மிக்க தன் கணவர் வீர மரணம் அடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவருக்குப் பொருத்தமான ஒரு அஞ்சலியை இந்த இளம் பெண் செலுத்தி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் தன் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது நிகிதா பேசிய சொற்கள் பொருள் பொதிந்தவை :
“நீங்கள் என்னை நேசித்ததாகச் சொன்னீர்கள்.. ஆனால் நாட்டைத் தான் அதிகம் நேசித்தீர்கள்.. அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
அடுத்தவர்களை நீங்கள் நேசித்த விதம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஆட்களுக்காக உங்கள் உயிரையும் பணயம் வைக்க நீங்கள் தயாரானீர்கள்.
மிகவும் துணிச்சலான உங்களைக் கணவராக அடைந்தது எனது கௌரவம். உங்களை என் இறுதி மூச்சு இருக்கும் வரை நேசிப்பேன். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.. I owe my life to you !”
நமது பாரத நாட்டு வரலாற்றில் தங்கள் கணவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற களம் இறங்கிய வீரமங்கை வேலு நாச்சியார்.. ஜான்சி ராணி.. சித்தூர் ராணி பத்மினி போன்ற வீரமங்கைகள் நிறையப் பேர்.
அந்த வகையில் சொன்னதைச் செயலிலும் காட்டி விட்ட இந்த நவீன வீர மங்கை நிகிதா கௌலுக்கு நாமும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.. நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
“நம்பற்குரிய நம் வீரர் - தன் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் !” என்ற நம் முண்டாசுக் கவியின் வரிகள் இங்கு நினைவு கூறத் தக்கது !
ஜெய்ஹிந்த் !
No comments:
Post a Comment