நிழல் இல்லாத நாள் !
பூஜ்ய நிழல் நாள் !
Zero Shadow Day !
வானியலில் எத்தனையோ அரிய நிகழ்வுகள் ஏற்பட்டு, நம்மை சிலிர்க்க வைத்துவிடுகின்றன.. அப்படித்தான், இந்த நிழல் இல்லா நாளும் வியப்பைத் தருகிறது..
நிழல் இல்லாத நாள் என்றால் என்ன? இந்த நாள் ஏன் மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது தெரியுமா?
ஆனால், குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் செங்குத்தாக நிழல் அமையும்...
இந்த நாட்களில் நண்பகலில், நம்முடைய நிழல் நீளாமல், காலடியின் கீழேயே அமையும்... இதற்குதான் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்று சொல்வார்கள்.
இதையே ஆங்கிலத்தில் Zero Shadow Day என்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது சூரியக் கதிர்வீச்சு நேர் செங்குத்தாக விழக்கூடிய நாளாகும்.இந்த Zero Shadow Day பொதுவாக, ஒரு வினாடியின் ஒரு பகுதியே நீடிக்கும் என்றாலும், அதன் விளைவுகளை இரண்டு நிமிடங்களுக்கு பார்க்க முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆண்டுக்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நிகழும். அங்கு நண்பகலில் சூரியனின் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் செங்குத்தாக இருக்கும். இதனால் செங்குத்தாக இருக்கும் கட்டடங்கள், பொருட்கள், மனிதர்களின் நிழல் தரையில் விழாது.
இந்த நாட்களில் மதியத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த ஒரு பொருளும் நிழலுடன் இருக்காது என்று இந்திய வானியல் சங்கத்தின் இணையதளம் விளக்குகிறது.
பெங்களூரு 13 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் அமைந்துள்ளதால், இந்த அரிய வானியல் நிகழ்வான நிழலில்லா வகை 24.04.2024 அன்று பெங்களூருவில் நிகழ்ந்தது.
அதன்படியே, இன்று ( 24.04.2024 ) சரியாக மதியம் 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழவில்லை... இந்த அரிய நிகழ்வை பெங்களூர்வாசிகள் தங்கள் வீடுகளிலிருந்தே நேரடியாகவே சோதித்துப் பார்த்தனர்.. உயரமான பொருளைச் செங்குத்தாக வைத்து, அதன் பிம்பம் தரையில் விழுகிறதா என்று பார்த்தார்கள்.. நிழல் சுத்தமாக விழவில்லை. அதேபோல, தங்கள் தலைக்கு மேல செல்போனை உயர்த்தி பிடித்தும் தங்கள் நிழலை கண்டறிய முற்பட்டனர். அதிலும் நிழல் எதுவுமே விழவில்லை.
கடந்த வருடம் ஏப்ரல் 25 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய 2 தேதிகளில் பெங்களூரில் பூஜ்ஜிய நிழல் நாட்கள் அறியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, இந்திய நகரங்களான சென்னை, மும்பை, புனே போன்ற பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் இன்று நிகழ்வு மதியம் 12:13 மணியளவில் இது நிகழ்ந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு பூமியின் அச்சுடன் தொடர்புடையது. அப்போது, சூரியன் குறிப்பிட்ட அட்சரேகைக்கு நேர் உச்சியில் இருக்கும் போது இந்த அற்புதமான தருணம் ஏற்படும். சுற்றுப்புறங்கள் நிழல்கள் இல்லாத பகுதியாக மாறும்.இந்திய வான் இயற்பியல் கழகம், வானியல் கல்வியை ஊக்குவிக்க இந்த நிகழ்வைப் பயன்படுத்துகிறது. பூமிக்கும் சூரியனுக்குமான உறவை இதன் வாயிலாக விளக்குகின்றனர்.
கோரமங்களா வளாகத்திற்கு 24.04.2024 அன்று அழைக்கப்பட்டனர்.
அங்கு, நிழல் இல்லாத நேரமான பிற்பகல் 12:17 முதல் 12:23 மணி வரை, நேரடிச் செயல்பாடுகளைக் கண்டு ரசித்தனர்.மனிதர்கள் கண்டு பிடித்தது கொஞ்சமே கொஞ்சம் தான் !
இயற்கையின் கண்டறியப்படாத அற்புதங்கள் அதிசயங்கள் ஏராளம் ஏராளம்.. இல்லையா அன்பு நண்பர்களே ?
நலமே விழைவு : நலமே விளைவு !
தகவல்கள் : படித்தவை மற்றும் கேட்டவை.
படங்கள் உதவி கூகுள்.
நன்றி கூகுள் !
No comments:
Post a Comment