Monday, 29 July 2024

சிவபெருமானுக்கு உரிய எட்டு விரதங்கள் :

1‌. சோமவார விரதம் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்.

அதிலும் குறிப்பாக கார்த்திகை சோமவார விரதம் மிகவும் விசேஷம்  .

2 . மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை விரதம். ஆருத்ரா தரிசனம் என்றும் இதைச் சொல்வார்கள். நடராஜப் பெருமானுக்கு உகந்த விரதம் .

3. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி : மஹா சிவராத்திரி விரதம்.‌

பாரதம் முழுவதும் அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் மிகவும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படும் இந்த நன்னாளில் மாலை முதல் தொடங்கி 4 கால பூஜைகள் நடைபெறும் .

4. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று உமா மஹேஸ்வர விரதம் . அம்பிகை தவமிருந்து ஐயனின் பாகம் இடது பெற்ற நாள்.

5. பங்குனி உத்திரம் - திருக்கல்யாண விரதம் ஒரு உற்சவமாகவே கொண்டாடப்படுகிறது.

6. தைப்பூசம் - பாசுபத விரதம்.

7. ஐப்பசி அமாவாசை அதாவது தீபாவளி அன்று கேதார கௌரி விரதம். 

8. வைகாசி பூர்வபட்ச அஷ்டமி விரதம்.


No comments:

Post a Comment