சில மறுக்க முடியாத உண்மைகள் !
தொகுப்பு - 1
1) மேலழகு விரைவில் கழன்று விடும்.. உள்ளழகு உள்ளத்தில் நிறைந்து விடும் !
2 ) எந்தப் பிரச்னையையும் முழுதாக உணர்ந்தவன் தெரிந்து தெளிகிறான் : உணராதவன் ஓய்ந்து போகிறான் !
3) நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகின்றன !
4) வறண்ட நாவும் பசித்த வயிறும் முழுமையாக வேலை செய்யாது.. அதுவும் நீரும் உணவும் கிடைக்கவே கிடைக்காது என்னும் போது !
5) மனிதர்களுடைய மனதை வசப்படுத்தக் கூடிய செயலுக்குப் பெயர் வாக்கு வன்மை !
6) பொய் சொல்லி நீண்ட காலம் வாழ்ந்தவனும் இல்லை : மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை !
7) பெரும்பாலான மக்களுக்கு.. அவரவரின் தற்போதைய நிலை மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை ! ஏதோவொரு குறை இருந்து கொண்டே இருக்கிறது !
8) அளவுக்கு அதிகமானது போல்.. அளவுக்குக் குறைவானதும் பெரிய அபாயமே !
9) இயற்கை , காலம் , பொறுமை - இம்மூன்றும் தான் மிகப்பெரிய மருத்துவர்கள் !
10) மகிழ்ச்சிக்கும்.. துயரத்திற்கும் பெரிய இடைவெளி எப்போதும் இருந்ததில்லை !
11) மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்குச் சமமானது மட்டுமல்ல.. மேலானதும் கூட !
12) வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும் ! உன் உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய் அன்பு நண்பா !
13) ஒரு பலவீனமான உடல் மனதையும் பலவீனப்படுத்துகிறது . எனவே உடல் நலத்தைப் பேணுதல் மிகவும் முக்கியம் நண்பா !
14) வாழ்க்கை என்பது வாய்ச் சொல்லால் ஆனதல்ல அன்பு நண்பா ! வளமான செயல்களால் ஆனது !
15) மனதின் வேண்டுதலை நிறைவேற்றுபவர் தான் கடவுள். மதத்தின் வேண்டுதலை அல்ல !
16) எல்லோருக்கும் உடையும் புள்ளி என்று ஒன்று இருக்கிறது !
17) முட்டாள்கள் குணம் என்பது, தாங்கள் செய்ய முடியாத காரியத்தை அறிவாளிகளும் செய்ய முடியாது என்று நினைக்குமாம். அது தான் அவர்களுடைய இயல்பு !
18) உடன் இருப்பவர்களுக்கு ஓடமாக இரு ! உதறிவிட்டுப் போனவர்களுக்குப் பாடமாக இரு !
19) அவிழ்க்க முடிந்த முடிச்சை அறுக்க நினைக்காதீர்கள்.
20)!இன்று தலைகுனிந்து படித்தால் நாளை தலைநிமிர்ந்து வாழலாம்!
21) வண்ணத்துப்பூச்சிக்கு வானத்தை விற்பவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
22) முதலில் உங்களை வெல்லுங்கள்: பிறகு உலகை வெல்லலாம் !
23) நேர்மறையான எண்ணங்கள்... உனது வெற்று ஒலியைச் சங்கீதமாக்கும்..
உன் வெறும் அசைவை நாட்டியமாக்கும்..
புன்னகையை பெரும் சிரிப்பொலியாக்கும்…
மனதைத் தியானத்தில் திளைக்க வைக்கும்..மொத்தத்தில் வாழ்க்கையைக் கொண்டாட்டமாக்கும் !
24) எல்லாவற்றையும் விட செயல்கள் சத்தமாகப் பேசுகின்றன..
25) தப்பை அல்லது தவறைச் சரியாகச் செய்தவன் தலை நிமிர்ந்து வாழ்கிறான் ! நல்லதைத் தப்பாக அல்லது தவறாகப் செய்தவன் தலை குனிந்து வாழ்கிறான் !
26) விருட்சம் நீரற்றுப் போனால் கிளைகள் விறகாகி விடும் !
27) கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை.. கல் தான் காணாமல் போகும்.. விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்.. நாம் கடலாக இருப்போம் !
28) காற்றடிக்கும் திசையில் பறக்கும் பலூன் அல்ல நாம் !
29) அடித்துச் செல்லும் ஆற்றில் உதிர்ந்த இலையாக இருப்பதை விட, திடமான பாறையாக இருந்திடலாம். தப்பில்லை !
30) தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது !
31) பிரச்சினையைக் கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை.. ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை !
32) “Make me proud by being worthy citizens of this world " -
அதாவது ஒரு நன் மதிப்புள்ள உலகக் குடிமகனாக இருந்து என்னைப் பெருமைப் படுத்து ! ஒரு நண்பரின் அம்மா எப்போதும் சொல்வது !
34) அறிவைப் பெருக்கிக் கொள் ! ஆகாயமும் வசமாகும் !
35) இயல்பாக இரு ! இதயம் வலுவாகும் !
36) உண்மையை கைக்கொள் ! நேர்மை தானே வரும் !
37) ஊருக்கு நன்மை செய் ! உன் வீடு நலமாக இருக்கும் !
38) எண்ணத் தூய்மை கொள் ! வண்ண மயமாகும் உன் வாழ்க்கை !
39) ஏணி போல் இரு ! ஏற்றம் தானே வரும் !
40) ஒன்று குறைந்தால் கூட 99 தான் ! அது 100 ஆகாது ! அதனால் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது தான் !
41) கடமையைச் செய் !கவலை குறைந்து வாழலாம் ! பலனை எதிர்பார்க்காதே ! பரிதவிப்பு இல்லாமல் வாழலாம் !
42) நல்ல நட்பை நாடு ! நாளும் வாழு மகிழ்வோடு !
43) “ நானை” (அதாவது “ நான் “ என்ற அகங்காரத்தை) விடு ! சேனைத் தலைவனாவாய் !
44) தொல்லைகளாகச் சிலர்: தொடர்பவர்களாகச் சிலர் : எல்லைகளாகச் சிலர் : எல்லாமுமாகச் சிலர் : கை கொடுப்பவர்களாகச் சிலர் : காட்டிக் கொடுப்பவர்களாகச் சிலர் : வலியாகச் சிலர் : வழியாகச் சிலர் : மகிழ்ச்சி கொடுக்கச் சிலர் : மகிழ்ச்சி கெடுக்கச் சிலர் :
இப்படி வாழ்க்கை நெடுஞ்சாலையில் தான் எத்தனை எத்தனை பேரை எதிர் கொண்டு வருகிறோம் அன்பு நண்பரே?
நல்லவையும் அல்லவையும் கலந்தது தான் வாழ்க்கை.. இல்லையா நண்பர்களே ?
45) வெற்றி மேலும் வெற்றியை உருவாக்கும் !
46) நல்ல வாழ்க்கை வழியை வகுத்து.. உழைப்பைக் கூட்டி.. எதிர்பார்ப்புகளைக் கழித்து.. மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் !
47) அன்பு நண்பா !
ஒருவர் தன்னுடன் ஒத்துப் போகவில்லை என்பதற்காக அவரை ஒதுக்க வேண்டாம்.
48) ஆனால் ஏற்கத் தகாதவற்றைப் பேசும் ஒருவரை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும் !
49) சுகம் தற்காலிகமானது !அமைதி நிரந்தரமானது !
50) மகிழ்ச்சிக்குத் திறவுகோல் வெற்றி அல்ல ! வெற்றிக்குத் திறவுகோல் தான் மகிழ்ச்சி !அதனால் தான் “எதையும் முழு மனதுடன் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள் நம் பெரியவர்கள் !
51) அட்டையைப் பார்த்து ஒரு புத்தகத்தை ஒருபோதும் மதிப்பிடக்கூடாது நண்பா !
52) கோபத்தை உடனே உடனே வெளிக்காட்டாமல் அடக்கி வைத்து.. தேவைப்படும் சரியான தருணத்தில் வெளிக்காட்டி உண்மையைப் புரிய வைப்பவனே அறிவார்ந்த மனிதன் !
53) நம் எண்ணங்களே உலகை அழகானதாகவும் காட்டுகிறது !அழகு அறவே அற்றதாகவும் காட்டுகிறது !
54) மனதில் திண்ணமான உறுதி இருந்தால் கடல் மேல் நடந்தே அதைக் கடக்கலாம் நண்பா !
55) பயனற்ற விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதால்.. வீணாவது நமது திரும்பப் பெறவே முடியாத பொன்னான நேரமும்.. நமது ஆக்கப்பூர்வமான சக்தியும் தான் நண்பா !
56) மதி கெட்டவன் பிறரை எளிதாக அவமதிக்கிறான் ! நிறைவான மதி உள்ளனவோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான் !
57) தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களைவெற்றி நெருங்குவதில்லை :தானாக ஒதுங்கிக் கொள்கிறது !
58) அணியும் உடை உனக்கும்.. உன்னைப் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரலாம் ! ஆனால் உன் முகத்தில் இருக்கும் உண்மையான மலர்ச்சி அதைவிடச் சிறந்த மகிழ்ச்சியைத் தரும் !
59) உள்ளத்தில் உண்மை இருக்குமாயின் , கால தாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம் !
60) உன் குறைகளை உண்மையான நண்பன் கட்டாயம் எடுத்துச் சொல்வான் ! அவனை விட உன் எதிரி உனக்கு நன்றாக உறைக்கும்படி சுட்டிக் காட்டுவான்!
61) உண்மையான வீரத்தின் அடையாளம், துணிவோடு கடமையைச் செய்வதே !
62) கோடையில் வியர்வையும்.. குளிர்காலக் குளிரும் இயற்கை : அவற்றைத் தாங்கிக் கொள்ள உடலையும் மனதையும் பக்குவப்படுத்த வேண்டும் !
63) அகங்காரமே எல்லா வகையான தப்புகள் மற்றும் தவறுகளுக்கு அடிப்படை !
64) கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வு சுகமாக இருப்பதில்லை !
65) பிறரின் தகுதியை நாம் தெரிந்து கொண்டால்.. நம் தகுதியையும் பிறர் அறிந்து கொள்வர் !
66) பெண்ணின் அன்பும்.. பரிவும் இருக்கும் இடத்தில் , அனைத்து வகையான மகிழ்ச்சியும் நிம்மதியும் கட்டாயம் இருக்கும் !
67) நல்ல பெண்ணின் வாழ்வு அன்பு நிறைந்தஒரு சரித்திரம் !
68) ஒருவருக்குச் செய்யும் உதவியின் பெரும் பகுதி அவருக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதே !
69) சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு.. அவனுக்கே அவனை அறிமுகப்படுத்துகின்றன !
70) அன்பு ஒன்றே உலகின் அனைத்துச் சக்திகளையும் விட அதிகமான ஆற்றல் படைத்தது !
71) கனமுள்ள தராசுத் தட்டு தான் தாழ்ந்திருக்கும் ! அதேபோல நிறைந்த அறிவுடைய நல்லவர்கள் மிகவும் அடக்கத்துடனே இருப்பர் !
72) ஒரு நல்ல பெண் பொறுமையில் இமயம் போலும்.. மண் மகளைப் போலும் இருப்பாள்!
73) எதற்கும் தயங்குவோரும்.. அஞ்சுவோரும் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியாது !
74) உடல் மெலிந்தாலும்.. உள்ளம் மெலியக் கூடாது !
75) நாவை வென்றால் உலகை வெல்லலாம் !
76) பலம் பொருந்திய நூறு கைகளை விட.. திறம் வாய்ந்த ஒரு மூளையே சிறந்தது !
77) பழகி விட்டால் எத்தகைய கடினமான வேலையும் எளிதாகத் தோன்றும் !
78) பெண்ணுரிமை இல்லாத நாடு.. காற்றில்லாத வீடு !
79) நீந்தாதவன் கடலைக் கடக்க முடியாது ! செயல்படாதவன் முன்னேற முடியாது !
80) தற்பெருமை முடியும் இடத்தில் ஒழுக்கம் உருவாகிறது !
81)சூழ்நிலைகள் பலவீனமான எண்ணம் கொண்டவர்களுக்கு எஜமானர்கள் : அறிவாளிகளுக்கு அவையே நம்பிக்கைகள் !
82) தீமையான சொற்களால் தான் தீமையான செயல்கள் இரட்டிப்பாகின்றன !
அதனால் தான் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்றனர் நம் முன்னோர் .
83)நம் வாழ்வின் உயர்வோ தாழ்வோ இருப்பது நம் நாக்கின் நுனியில் - அதாவது நம் பேச்சில் !
84) நல்ல மனிதர்களின் நட்பு நாளடைவில் நம்மையும் நல்ல மனிதர்களாக ஆக்கிவிடும் நண்பா!
85) நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் தீர்மானிப்பது போல்.. நம் செயல்களும், நம்மைக் கவனிப்பவர்களை, நம்மைக் குறித்துத் தீர்மானம் செய்ய வைக்கின்றன !
86) முடியாது என்ற சொல்லே நம் எண்ணத்தில் இருக்கக் கூடாது நண்பா !
87) தானாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பு மிகவும் குறைவு என்பதை நம் மனதில் எப்போதும் கொள்ள வேண்டும் அன்பு நண்பா !
88)அனுபவமின்றி யாரும் அறிவாளி ஆவதில்லை !
89)பொறுமையே பெரிய சொத்து ! நேர்மையே வெற்றி ! அமைதியே ஆற்றல் !
90)உடலுக்கு உடை எப்படியோ அப்படியே உள்ளத்துக்கு நல்ல குணங்கள் !
91)சூழ்நிலைகள் பலவீனமான எண்ணம் கொண்டவர்களுக்கு எஜமானர்கள் : அறிவாளிகளுக்கு அவையே நம்பிக்கைகள் !
92) தீமையான சொற்களால் தான் தீமையான செயல்கள் இரட்டிப்பாகின்றன !
அதனால் தான் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்றனர் நம் முன்னோர் .
93)நம் வாழ்வின் உயர்வோ தாழ்வோ இருப்பது நம் நாக்கின் நுனியில் - அதாவது நம் பேச்சில் !
94) நல்ல மனிதர்களின் நட்பு நாளடைவில் நம்மையும் நல்ல மனிதர்களாக ஆக்கிவிடும் நண்பா!
95) நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் தீர்மானிப்பது போல்.. நம் செயல்களும், நம்மைக் கவனிப்பவர்களை, நம்மைக் குறித்துத் தீர்மானம் செய்ய வைக்கின்றன !
96) முடியாது என்ற சொல்லே நம் எண்ணத்தில் இருக்கக் கூடாது நண்பா !
97) தானாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பு மிகவும் குறைவு என்பதை நம் மனதில் எப்போதும் கொள்ள வேண்டும் அன்பு நண்பா !
98)அனுபவமின்றி யாரும் அறிவாளி ஆவதில்லை !
99)பொறுமையே பெரிய சொத்து ! நேர்மையே வெற்றி ! அமைதியே ஆற்றல் !
100) உடலுக்கு உடை எப்படியோ அப்படியே உள்ளத்துக்கு நல்ல குணங்கள் !
+++++++++++++++
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள் !
உண்மையான அன்பு.
நேர்மையை எப்போதும் பேணுதல்.
உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆனதை உடனே செய்தல் : அதை அத்தோடு மறந்து விடுதல்.
நன்றாகப் படிக்கும் பொருளாதார ரீதியாக வசதி குறைவான பிள்ளைகளுக்கு நம்மால் முடிந்த அளவு பண உதவி செய்தல்.
நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எல்லா வகையிலும் நன்றாகக் கவனித்து வழி அனுப்புதல்.
கூடுமானவரை நமது பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றுதல் :
" உணவே மருந்து மருந்தே உணவு" என்ற கொள்கையைக் கடைப்பிடித்தல்.
வீட்டைச் சுத்தமாகப் பராமரித்தல் : குறிப்பாகச் சமையல் அறை மற்றும் கழிப்பறை .. குளியலறை .
எந்த வேலையானாலும் Smart Work : not Hard Work.
Smart Work என்பது ஒரு விஷயத்தை எல்லாக் கோணங்களிலும் நன்கு ஆராய்ந்து அதைச் செயல்படுத்த ஆரம்பித்தல் !
Hard Work என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமே !
தமிழில் பிழையின்றி எழுதுதல்.
குடும்பத்தில் அல்லது நட்பு வட்டத்தில்.. பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளுக்குக் கூடுமானவரை சுமூகமாகத் தீர்வு காண முயலுதல் : தொடர்ந்த முயற்சிகளுக்குப் பின்னும் முடியவில்லை என்றால் சில காலம் ஒதுங்கி இருத்தல்.
உணர்ந்து வந்தாலும்.. உணராமல் வந்தாலும்.. வந்து விட்டார்கள் என்றால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதாரக் கவனித்து வழி அனுப்புதல்.
பழைய பிரச்சனைகளைக் கிளப்பாது இருத்தல்.
நமக்குத் தெரிந்த நல்ல குணமுள்ள பிள்ளைகளுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல வழி காட்டுதல்.
யாரிடமும்.. எந்தச் சூழ்நிலையிலும் எதையும்.. எங்கேயும் எதிர்பாராமல் இருத்தல்.
இராணுவ வீரர்களை மனதார மதித்தல். அவர்களின் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக மனதாரப் பிரார்த்தித்தல் !
எல்லாவற்றிற்கும் மேல் நாட்டுப்பற்று : “ பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே” என்பதை எப்போதும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுதல்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை அன்புநண்பர்களே !
இதற்கெல்லாம் மேலாக " வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே “ என்று இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து விடுதல்.
அடிக்குறிப்பு :
ஏதோ எழுத வேண்டும் என்று எழுதவில்லை அன்பு நண்பர்களே!
Me and my husband lived a Very Much Contented Life என்றால் மேலே சொன்னவைகளைப் பின்பற்றியதால் மட்டுமே என்று இந்த எளியவளால் அறுதியிட்டுக் கூற முடியும்.
+++++++++++++
ஒரு மனிதன் மன அழுத்தத்திற்கு எவையெல்லாம் காரணங்களாக அமைகின்றன?
எவையெல்லாம் என்று கேட்டால் எல்லாமே தான். வாழ்க்கையின் ஒவ்வொரு ஆளும்.. ஒவ்வொரு பொருளும் நமது மன அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கிறார்.. இருக்கிறது .
இந்த எளியவளைப் பொறுத்தவரை எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு.. எதிர்த்து நின்று சமாளிக்கும் மனப் பக்குவம் இல்லாமை தான் மிக முக்கியமான காரணம் என்பேன்.
இன்னொரு விஷயம் : நமக்கு மட்டுமே இதெல்லாம் நடக்கிறது என்று தீவிரமாக நினைப்பது.
" முன் பின்னாய்த் துயரம் முனிவருக்கும் உண்டு " என்று எப்போதோ ஒரு கவிதையில் எழுதினேன் இந்த எளியவள்.
உலகில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும்.. கவனியுங்கள்.. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. எல்லா உயிர்களுக்கும் பிரச்னைகள் நாள்தோறும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
" தம்மின் மெலியாரைக் கண்டு தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க !" என்கிறார் வணக்கத்துக்குரிய குமரகுருபரப் பெருமான்.
இதையே தான் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் எளிமைப்படுத்தி.. " உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு !" என்று சொல்லிச் சென்றார்.
எதையும் நாம் காணும் அல்லது அணுகும் முறையில் தான் இருக்கிறது மன அழுத்தம் வருவதும்.. வராமல் இருப்பதும் !
நேர்மையான மனத் துணிவோடு பிரச்னைகளைச் சமாளிக்கப் பழகிக் கொண்டால் மன அழுத்தம் என்ற சொற்களுக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது !
+++++++++++++++++++
அனுபவம் பேசுகிறது !
அன்பு செய்யத் தெரிகிற மனதுக்குத் தான் வெறுக்கவும் தெரிகிறது : குணமுள்ள இடத்தில் தான் கோபமும் இருக்கிறது : ஏனெனில் அணைக்கிற கைகள் தானே அடிக்கவும் செய்கிறது ?
மலராத மொட்டு, சருகான மலர், வெம்பிய பிஞ்சு, வதங்கிய காய், அழுகிய கனி - இவைகளுக்கு மதிப்பேது ?
நீலவானம் கேட்கவில்லை என்று வானம்பாடிப் பறவை பாடாது இருப்பதில்லை !
எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன . வீரனாக வேண்டும் என்று நினைக்கிறவன் வீரனாகிறான் : எழுத நினைப்பவன் வரலாறு படைக்கிறான் :
மக்கள் மனங்களைப் படிக்கத் தெரிந்தவன் தலைவனாகிறான் !
சின்ன வயதிலேயே தழும்பு ஏறி விட்டால் பெரிய வயசில் காயம் ஏற்படுவதில்லை : ஏற்பட்டாலும் காயமாக வலிப்பதில்லை !
நமக்கு உரிமை இல்லாத பொருட்களின் மீது அன்பு வைக்கக் கூடாது என்று அறிவிற்கு நன்றாகத் தெரிகிறது : பாழும் மனதிற்குத் தான் தெரிய மாட்டேன் என்கிறது !
சிதறிவிட்ட நீர்த் துளிகள் ஒன்று சேருமோ ? சென்று விட்ட நாட்கள் இன்று ஒன்று கூடுமோ ?
ஆசை, பாசம் , சொந்த பந்தம் எல்லாம் விலகுவதினால் லட்சியங்கள் அழிந்து போவதில்லை: ஏனெனில் லட்சியங்களை அவை உருவாக்குவது இல்லை !
உண்மையான அன்பிற்கு உருவங்கள் தேவையில்லை : உண்மையான நட்பிற்குச் சந்திப்புகள் தேவையில்லை !
சூதும் வாதும் நிறைந்த உலகில் நல்லார் ஓதும் வழி நடந்தால் துயரம் குறையும் : நெஞ்சே இதில் ஐயம் கொள்ளாதே !
ஆபத்துக்கு உதவாத நண்பனும்.. அரும்பசிக்கு உதவாத அன்னமும் பயனற்றவை !
நினைத்ததும் சாவது எளிது : பிறர் நம்மை நினைக்கச் சாவது அரிது !
வாழ்வும் சாவும் உடன் பிறப்புகள் !
மரத்தில் பூத்த பூவும் முடிவில் மண் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் !
கலி யுகத்தில் அஞ்சாமல் வாழ வேண்டிய நல்லவர்கள், அஞ்சி அஞ்சி அடங்கி விடுகிறார்கள் :
அஞ்சி அஞ்சிச் சாக வேண்டிய கயவர்கள் தலைநிமிர்ந்து திரிகிறார்கள் !
அறுந்த பட்டம் என்று ஒன்று இல்லை. அது உலக வழக்கெனும் உயர் நீள் கயிற்றில் உலாவும் பட்டம் !
எரித்திடும் தீயை இளநிலா வாழ்த்துமோ ?
கனி பறிக்கிறோம் என்று கருதிப் பிஞ்சைப் பறிப்பதால் என்ன பெறுவோம் ?
கூர்முட் செடி என்று கூறி மலர்கள் மலர மறுத்தல் உண்டோ ?
தீயதற்கு இலவம் பஞ்சு நிபந்தனைகள் செப்ப வந்தால், வாய்க்கழகு என்று அதனைத் கேட்கும் வழக்கம் உண்டோ ?
முல்லைக் கொல்லையில் தென்றல் மோதிட ஒரு சில இதழ்கள் உதிர்ந்தன என்றால் முல்லைக் கொல்லையே பாழ் என்றிடல் நன்றோ ?
முகஸ்துதி ஒழுக்கத்தின் சாவு மணி !
காதலுக்கு அழகை மட்டும் நம்பிப் போகிறவர்கள், ஓட்டைப் படகில் உல்லாசப் பயணம் செய்பவர்களின் கதியைத் தான் அடைவார்கள்.
உண்மையான வெற்றி பெற நினைக்கும் மனிதன் யாருடைய பரிந்துரை மற்றும் ஆதரவை எதிர்பார்ப்பதில்லை.. நம்புவதில்லை.
தன் திறமையை மட்டுமே அவன் நம்புகிறான் !
மலரின் உண்மையை அதன் மணமும்,
செயல் திறனை ஒருவரது சொல்லும்,
நெஞ்சகத்துள்ள தீமையை ஒருவரது எண்ணங்களும்.. பேச்சும் , உள்ளக் குறிப்பை முகமும் உணர்த்தும் !
புயல் சூழ்ந்த கடலிடையே நம்மை வழி நடத்திச் செல்வது நமது நம்பிக்கையே !
+++++++++++++++
பொருள் பொதிந்த வாழ்வு !
இருளைப் போக்கும் ஒளியைப் போன்ற ஒரு உயிராக இரு!
பசிக்கும் உயிருக்கு உணவு கொடுக்கும் ஒரு உயிராக இரு !
தாகம் தணிக்கும் தண்ணீர் தரும் ஒரு உயிராக இரு !
பரிதவிக்கும் ஒரு உயிருக்கு ஆறுதல் நல்கும் ஒரு உயிராக இரு!
துயரத்தில் துவளும் ஒரு உயிருக்கு தோள் கொடுக்கும் ஒரு உயிராக இரு !
ஆணோ.. பெண்ணோ நமது மனப்பான்மையை மாற்றிக் கொண்டு , சக உயிர்களுக்காகவும் கொஞ்சம் வாழ முயன்றால்..
நீண்ட காலம் நிலைத்திருக்கும் அமைதி அளிக்கப்பட்டு
ஆண்டவனால் நிச்சயமாக நாம் ஆசீர்வதிக்கப் படுவோம் !
அப்போது சமூகத்திலும் மகிழ்ச்சி மலரத் தொடங்கி விடும் !
அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் அதுதான் அன்பு நண்பா !
+++++++++++++
வாழ்க்கை சார்ந்த விதிமுறைகள் !
1) இறையச்சம்
2) உண்மை (Sathyam)
3) நேர்மை (Straightforwardness)
4) ஆய்ந்து.. ஆராய்ந்து புத்திசாலித்தனம் நிறைந்த வேலை பார்க்கும் முறை (Smart Work )
5) உண்மையான அன்பு (Real Affection)
6)விட்டுக் கொடுத்துப் போதல் . (Adjustment)
7) நம்மிடம் உதவி நாடி வரும் எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்தல். (Philanthropism)
8) நம்மால் முடிந்த சமுதாயத் தொண்டு. (Social Service)
9) எதையும் ஒத்துக் கொள்ளுதல். குறிப்பாக நல்லவைகளை (Acceptance).
10) அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களைப் பாராட்டுதல்.(Appreciation)
11) அதேபோல் உறவு மற்றும் நட்பு வட்டத்தில் யாரேனும் தேவையற்ற செயல்களைச் செய்யும் போது.. அதைத் தவிர்க்கும்படி முடிந்தவரை எடுத்துச் சொல்லுதல் .
12) எதிலும் ஒரு ஒழுங்கு (Discipline)
13) ஒரு அக்கறையோடு செய்யும் செயல் .(Devotion - இந்த ஆங்கிலச் சொல் இந ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல.. நாம் செய்யும் எந்த நல்ல வேலைக்கும் பொருந்தும்).
13)முடிவெடுக்கும் திறன் (Decision Making ).
( “ எண்ணித் துணிக கர்மம் “ என்று இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை சொல்லி வைத்துள்ளார்.)
14) உறுதியான போக்கு (Determination)
15) செய்யும் செயல்களில் அர்ப்பணிப்பு உணர்வு (Dedication)
முயன்ற வரை பின்பற்றுவோம் !அன்பு நண்பர்களே !
நலமே விழைவு !
நலமே விளைவு !
++++++++++++++
உங்கள் வாழ்க்கையின் தலைசிறந்த வாழ்க்கை விதிகள் என்னென்ன ?
ஒரு நண்பர் கேட்ட இந்தக் கேள்விக்கு எனது பதில் !
1) வாழு.. வாழ விடு !
2) யாரிடமும் உண்மையான அன்புடன் இரு !
3) அன்பு வை.. ஆசை வைக்காதே !நேசம் வை.. பாசம் வைக்காதே!அன்பும் நேசமும் நிலையானவை : ஆசையும் பாசமும் தாற்காலிகமானவை!
4) எவ்வளவு இக்கட்டுகள் வந்ததாலும் நேர்மை தவறாதே !
5) உனக்குப் பசிப்பது போலத்தான் எல்லா உயிர்களுக்கும் பசிக்கும்.
6) முடிந்தால் மனதோடு உதவி செய்.. இல்லையென்றால் தொல்லை செய்யாதே !
7) திருந்தாத துஷ்டனைக் கண்டால் தூர விலகு !
8) எவ்வளவு முடியுமோ அவ்வளவு விட்டுக் கொடுத்துப் போ.. முடியவே இல்லை என்றால் மொத்தமாக ஒதுங்கி விடு !
9) ஒத்துக் கொள் அல்லது ஒதுங்கிக் கொள்! அதாவது எந்த வேலையோ.. பிரச்சனையோ யோசித்து ஒத்துக் கொண்டு விட்டால் ஒதுங்காதே ! ஒதுங்கிக் கொண்டு விட்டால் திரும்பப் போய் ஒத்துக் கொள்ளாதே !
10) எல்லாவற்றிற்கும் மேல் வீடெல்லாம் சேர்ந்தது தான் நாடு : ஆனால் நாடு நல்லா இருந்தால் தான் வீடு நல்லா இருக்கும் ! அதனால் நாட்டை நேசி .. நாட்டுப்பற்று மிகவும் முக்கியம் !
மேலேயுள்ள அனைத்தும் என் அம்மா என் மனதில் பதிய வைத்துச் சென்ற வாழ்க்கை விதிகள் !
95 விழுக்காடு கடைப்பிடித்து வாழ்க்கையின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டேன் !
நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !
++++++++++++
உன்னுடைய நோக்கம் தூய்மை ஆனதென்றால்… நீயே எதிர்பாராத நேரத்தில்.. எதிர்பாராத இடத்திலிருந்து உனக்கு உதவிகள் தேடிவரும் நண்பா !
எதை அளக்க அல்லது அளவிட முடியாதோ அதை நிர்வகிக்க முடியாது ! எதை நிர்வகிக்க முடியவில்லையோ அதை அளக்க அல்லது அளவிட முடியாது !
குடும்பத்தைச் சுமப்பவன் கோமாளி ! விட்டுக் கொடுத்துப் போகிறவன் ஏமாளி !
பொதுநலம் நினைப்பவன் பிழைக்கத் தெரியாதவன் !சுயநலம் மிக்கவன்சொர்க்கவாசி! இதுதான் சமூகம் நம்மைப் பார்க்கும் பார்வை நண்பா !
பாண்டவர்கள் உரிமை இருந்தும் காப்பாற்றத் தெரியாதவர்கள் !கௌரவர்கள் உரிமைக்காக எந்த எல்லைக்கும் போகத் துணிந்தவர்கள் ! நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும் !
நித்திய கர்மத்தை நீ செய் !செயலின்மையை விடச் செயல் சிறந்தது. செயல் செய்யாதவனுக்கு தன் உடலைப் பேணுதல் கூட இயலாது ! (பகவத் கீதை )
தீமையான சொற்களைப் பயன்படுத்துவதைக் கூடுமானவரை தவிர்த்து விடுவோம் ! ஏனெனில் அவைகளால் தான் தீமையான செயல்கள் விளைகின்றன : இரட்டிப்பாகவும் ஆகின்றன.
அறிவாளிகளுக்கு நம்பிக்கையைத் தரும் ! அதே சூழ்நிலைகள்… பலவீனமான எண்ணங்கள்கொண்டவர்களுக்கு எஜமானர்கள்!
நாம் நம் செயல்களைத் தீர்மானித்தால்.. அவைகள் நம்மை அதாவது நம் Image ஐத் தீர்மானிக்கின்றன. ஆகவே முடிந்தவரை நல்லதே செய்வோம் நண்பா !
உன் வாழ்வின் உயர்வு, உன் நாவின் நுனியில் !
நாம் நம் வாழ்நாளில் செய்த நற்செயல்களே நமக்கு உண்மையான சொந்தம் !
பொறுமையாக இருப்பவனால் தான், விரும்பியதை அடைய முடியும் !
கோபத்தால் சாதிப்பதை விட ஒருவன் பொறுமையால் அதிகம் சாதிக்கிறான் !
நாட்டுப்பற்றை விட மேலானது எதுவும் இல்லை !
ஒரு நாடு, அதன் திறமையான மேன்மை மிகுந்த கல்வி நிறுவனங்களால் தான் உருவாக்கப்படுகிறது !
அன்பைப் பணம் கொடுத்து வாங்கியவனும் இல்லை !
பணத்திற்காக விற்றவனும் இல்லவே இல்லை !
ஏனெனில் அன்பிற்கு விலை ஏதும் எப்போதும்.. எங்கேயும் கிடையவே கிடையாது !
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இறந்தவர்களுக்குச் சமம் !
நம்பிக்கை எதிர் காலத்திற்கு ஒளி தரும் : வழி காட்டும் !
ஞாபகமோ இறந்த காலத்திற்கு முலாம் பூசும் !
நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது !
ஏதோவொரு வகையில் துயரத்தை அனுபவிக்காமல் மகிழ்ச்சியை அடைய முடியாது அன்பு நண்பா !
நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலை அளிக்கும்.. அதிகரிக்கும் !தெரிந்து கொள் நண்பா !
மடிவதாய் இருந்தால் விதையாக மடிய வேண்டும் ! விழிப்பதாக இருந்தால் சூரியனாக விழிக்க வேண்டும் !
தொடக்கத்தை எவ்வளவு தீவிரமாக நினைத்துப் பார்க்கிறாயோ.. அதைவிட அதிகமாக முடிவைப் பற்றியும் யோசித்துச் செயல்படு நண்பா !
முதுமை வயதைப் பொறுத்தது அல்ல : அவரவர் உணர்வைப் பொறுத்தது !
வாழ்வில் நிறையப் பெற வேண்டும் என்றால்.. நிறையக் கொடுக்கவும் வேண்டும் அன்பு நண்பா !
குறிக்கோள் நிலையாக இருந்தால் மட்டுமே நாம் விரும்புவதைச் சாதிக்க முடியும் !
சில காரியங்கள் திறமைக்கும் , கடின உழைப்புக்கும் அப்பாற்பட்டவை !
உண்மையான அன்பை வாய்ச் சொல் வெளிப்படுத்தாது : செயல் மட்டுமே வெளிப்படுத்தும் !
நன்மையைப் பலர் விரும்புவர் : உண்மையைச் சிலரே விரும்புவர் !
பக்திக்கும், மரியாதைக்கும் உரிய இடம் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல : நாம் பணிபுரியும் இடமும் கூட ! ஏனெனில் செய்யும் தொழிலே தெய்வம் !
யார் ஒருவர் தனக்குத்தானே வாழ்வில் சில முறையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கடைப்பிடிக்கிறாரோ , அவரே உண்மையான சுதந்திர மனிதர் அன்பு நண்பா !
பணம் இல்லாதவனுக்கு உணவுக்குத் தட்டுப்பாடு :
பணம் இருப்பவனுக்கு உணவுக்குக் கட்டுப்பாடு
+++++++++++++
கசக்கும் உண்மைகள்
மலையும் மலை சார்ந்த இடமும் அன்று குறிஞ்சி !
இன்று ? குவாரி !
காடும் காடு சார்ந்த இடமும் அன்று முல்லை !
இன்று ? தொழிற்சாலைகள் !
வயலும் வயல் சார்ந்த இடமும் அன்று மருதம் !
இன்று ? ஃப்ளாட்கள் (flats) !
கடலும் கடல் சார்ந்த இடமும் அன்று நெய்தல் !
இன்று ? அமிலம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் கிடங்கு !
மணலும் மணல் சார்ந்த இடமும் அன்று பாலை !
இன்று ? ஆற்று மணல் அள்ள வரிசையாக லாரிகள் நிற்கும்.. காத்துக் கிடக்கும் இடங்கள் !
என்று மாறும் இந்த நிலைமை ?
++++++++++++++
தெரிந்து கொள்வோம் நண்பா !
வெற்றியின் நண்பன் நம்பிக்கை !
பெருமைக்குரிய மனிதர்கள் யார் தெரியுமா நண்பா ?
வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தத் தெரிந்தவர்கள் !
அறிவற்ற நண்பனின் பேச்சைக் கேட்டுத் தோல்வி அடைவதை விட.. புத்திசாலியின் வசவுகளைக் (திட்டுகளைக்) கேட்டு.. அதை ஆராய்ந்து.. அதன்படி நடப்பது எவ்வளவோ மேல் நண்பா !
புத்தகம் இல்லாத வீடு.. ஜன்னல் இல்லாத வீட்டுக்குச் சமம் !
நிலையற்ற அழகு கண்ணை மட்டுமே கவரும் ! திறமை மனதையும் கவரும் !
உருண்டோடும் செல்வத்திடம் வைக்கும் ஆசையே அனைத்து அழிவுக்கும் படிப்படியாக வழி வகுக்கும் !
அசைக்க முடியாத நம்பிக்கையைத் தான் விவேகம் என்கின்றனர் ஆன்றோர் !
சின்னஞ்சிறு வயதில் அறியாமையுடன் இருப்பது பாவம்! ஆனால் வளர்ந்த பின்னும் அப்படி இருப்பது பைத்தியக்காரத்தனம் !
படிக்கும் போது ஆழ்ந்து படிப்பவனால் தான் சரியான மேற்கோள்களைக் காட்ட முடியும் !
ஒருவரின் சொந்த ஒழுக்கம் அவருக்கு தன்னம்பிக்கை தருகிறது : அந்தத் தன்னம்பிக்கை வெற்றியை அவரிடம் அழைத்து வருகிறது !
உண்மையில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், உனக்கு நீயே நேர்மையான நீதிபதியாக இருந்து பார் !
ஒருவரிடமுள்ள திறமையைப் பட்டை தீட்டி வெளிக் கொண்டு வருவதே உண்மையான கல்வி !
உண்மையான வலிமை உடல் பலத்தால் மட்டுமே வருவதில்லை : அது ஒருவரின் மன உறுதியிலிருந்தே உருவாகி வெளி வருவது !
பெற்றோர் தங்களின் கடமைகளை நேர்மையாகச் சரிவரச் செய்தால் , அதுவே பிள்ளைகளின் நல்ல வளர்ச்சிக்குப் போதுமானது !
கோபமும் , பொறாமையும் மனிதனைக் கொன்று விடும் சக்தி படைத்தவை ! அதனால் அக்குணங்களை அறவே தவிர்ப்போம் அன்பு நண்பா !
நீதியைப் பின்பற்றி வாழ்பவர் வாழ்க்கைச் சூரிய ஒளியைப் போல் ஒளிரும் தன்மை வாய்ந்தது!
உன் எதிரிகளை நேசிக்க முயற்சி செய் : உன்னைச் சபிக்கிறவர்களை வாழ்த்திப் பழகு! ஏனெனில் அவர்கள் தான் உன் வாழ்க்கையை , உன்னை அறியாமலேயே புடம் போட்டு ஒளிரச் செய்பவர்கள் !
சிறிய விஷயத்தில் தவறாக நடப்பவன்.. பெரிய விஷயத்திலும் தவறாகவே நடப்பான் !
சரியான முறையில் வளர்க்கப்பட்ட மரங்களே நல்ல பலனைத் தரும் !
உண்மையான அன்பு உள்ள இடத்தில் அச்சமில்லை ! ஏனெனில் தூய அன்பு அச்சத்தைத் துரத்தவல்லது அன்பு நண்பா !
+++++++++++++
படித்ததில் பிடித்தது..
ஒரே ஒருவருக்கு மட்டுமே ஒரு விஷயம் தெரிந்தது என்றால் அது ரகசியம்.
இன்னொருவருக்குத் தெரிந்து விட்டால் அது விஷயம்.
நிறையப் பேருக்குத் தெரிந்து விட்டது என்றால் அது தகவல் .
ஊர் முழுக்கத் தெரியுமென்றால், அது செய்தி !
அடுத்த தலைமுறைக்கும் தெரியுமென்றால், அது வரலாறு !
No comments:
Post a Comment