வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
அன்பானவர்களுக்கு வணக்கங்கள்!
ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள். அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?...
சில தினங்களுக்கு முன் நான் படித்தது இக்கட்டுரை.
" நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல் " என்றார் திருவள்ளுவர். இந்த முறை அறவே இல்லாத ஆங்கில மருத்துவம்...அதன் மூலம் சில குறிப்பிட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டாலர்களில் கொழிக்கின்றன.
எங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சித்த மருத்துவர் ( பைசாவுக்கு ஆசைப்படாத மனிதர்) கூறுவார் : ஒரு நோய்க்கு ஒரு மருந்து கொடுத்தால் குறிப்பிட்ட காலவரையறைக்குள் குணமாக வேண்டும்... அதுதான் மருந்து... அதற்குப் பேர்தான் மருத்துவம் " எவ்வளவு உண்மை.. !உணருங்கள் தோழர்களே..இளம் பிள்ளைகளே.
இளம் பெற்றோருக்கு ஒரு பணிவான விண்ணப்பம் :
உங்கள் குழந்தைகளுக்குக் கூடுமானவரை வீட்டில் சமைத்த உணவுகளையே கொடுங்கள்.. கொடுக்கும் போது அந்த உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை அவர்களுக்குப் புரியும்படி விளையாட்டாக எடுத்துக் கூறுங்கள். அவர்கள் அதிபுத்திசாலிகள்... கட்டாயம் புரிந்து கொள்வார்கள்.
இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் விரும்பும் வெளி உணவுகளை வாங்கிக் கொடுங்கள்... தப்பில்லை... நீங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் நண்பர்கள் கொண்டு வருவதைச் சாப்பிட ஆசைப்படுவார்கள். சாப்பிடவும் செய்வார்கள்... ஆனால் உங்களிடம் மறைப்பார்கள்.. அதற்கு இடம் கொடுக்காதீர்கள். எந்த விஷயத்தையும் அவர்களிடம் மனம் விட்டு அவர்களுக்குப் புரிகிற மாதிரி பேசுங்கள்... கட்டாயம் புரிந்து கொள்வார்கள்...
நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டும் வளர்க்கவில்லை... எதிர்கால பாரதத்தை வளர்க்கிறீர்கள்..
நாளைய நமது நாட்டின் அடிப்படை அஸ்திவாரமும் அவர்கள்தான்... தூண்களும் அவர்கள்தான்.
மனதில் கொள்ளுங்கள் பிள்ளைகளா !
" நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த
நாடே இருக்குது தம்பி !
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு
சரித்திரம் இருக்குது தம்பி "
நல்வாழ்த்துக்கள் அன்புப் பிள்ளைகளா !
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் Post comment sectionல் தவறாமல் பதிவிடுங்கள் கண்மணிகளா !
நம் பெரியோர்கள் உடம்பு முடியவில்லை என்றால் உடனே மருத்துவமனக்கு போக வேண்டாம் என்று சொல்வார்கள். இதை பார்த்தாவது இன்றைய தலைமுறைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteAgree, people should try to understand the reactions of their body upon having different food to decide to continue with certain food or not. Also should not attempt to visit doctors as symptoms are not always disease. Try to follow the most acceptable as mentioned by anatomy therapy by Healer Bhaskar.
ReplyDeleteஅந்த ஹீலர் பாஸ்கர் ஐயாவை கைது செய்தார்கள் கொரோனாவுக்கு நமது பாரம்பரிய மருத்துவமே போதும் என்று சொன்னதற்கு...
Deleteஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுக் குணமானவர்களுக்கு அமுக்குரா சூரணம் கொடுக்கிறார்கள்.
கபசுரக் குடிநீர் தொடர்ந்து குடிக்கச் சொல்கிறார்கள் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க..
என்ன அரசோ ?
நீயும் படித்திருப்பாய்...பாரதத்தில்.. இவ்வளவு நெருக்கமாக மக்கள் வாழ்ந்த போதும்.. வேகமாக.. அதிகமாக கொரோனா பரவாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறை என்று ஒவ்வொரு விஞ்ஞானியாக...ஆராய்ச்சியாளராகச் சொல்லத் தொடங்கி உள்ளனர்.
இதையே நமது ஹீலர் பாஸ்கர் சொன்னால் அவர் பொய்களைப் பரப்புகிறார் என்கிறார்கள்..
எல்லாமே அரசியல் ஆகிவிட்டது ஐயா !
நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் அன்பு மகனே !