அஸ்வகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்துகள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.
ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !
அஸ்வகந்தா லேகியத்தை 5 வயது முடிந்த குழந்தைகள் முதல் (கட்டாயம் 5 வயது முடிந்திருக்க வேண்டும்) பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் காலையில் ஒரு சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
எங்கள் நண்பர்கள் 3 பேர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மேல்நிலைப் பட்டங்கள் பெற்றவர்கள். மிகுந்த அனுபவசாலிகள் ! அவர்களின் அறிவுரையின்படி நாங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் அந்த மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி அஸ்வகந்தா லேகியத்தைக் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுத்து வருகிறோம். அவ்வப்போது ஓரிரு மாதங்கள் இடையில் நிறுத்தி மீண்டும் தொடரச் சொல்வார்கள் அந்த மருத்துவ நண்பர்கள்..
நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் இந்த லேகியம்.. நரம்பு தொடர்பான கோளாறுகளையும் சரிசெய்து விடுகிறது என்பது எங்கள் அனுபவம்.
நமது பாரம்பரியமான
" உணவே மருந்து..
மருந்தே உணவு " என்ற கொள்கை நிலைக்கு நாம் முழுவதும் திரும்பிவிட்டாலே நாம் நமது
" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்ற அருமையான ஆரோக்கிய நிலையை அடைந்து விடலாம் அன்பு நண்பர்களே !
நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
இந்தப் பதிவைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை எனது blogல் உள்ள Post comment பகுதியில் தயவுசெய்து தெரிவிக்கவும்.
நன்றிகள் நண்பர்களே !
No comments:
Post a Comment