தமிழர்கள் மட்டுமல்ல.. உலக வரலாற்றில் டச்சுக்காரர்கள் போர்த்துகீசியர்கள்...இப்படி எத்தனை எத்தனையோ நாட்டுக்காரர்கள் கடலோடி வாணிபம் செய்தனர்.. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாடு பிடித்தனர். சிலர் மட்டுமே சொந்த நாடு திரும்பினர். பலர் அப்படி அப்படியே.. வந்த இடத்திலேயே வாழத் தொடங்கி விட்டனர்.
ஒரு கட்டம் வரையில்.. எல்லாம் அமைதியாகப் போகும் வரையில் பிரச்னைகள் இல்லை. எங்கோ ஒரு சின்ன வில்லங்கம் ஏற்படும் போது கொளுத்திப் போட்டப் பட்டாசுகளாக நிலமை மாறிப் போய்விடுகிறது.. வாழ்வாதாரம் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டு அகதிகளாகப் புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர்.
எத்தனை நிகழ்வுகள் உலக வரலாற்றில்..
நவீன காலத்திலும் இதேதான் நிலைமை..
அதனால் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்வோர் ஒரு கட்டத்தில் போதுமென்ற மனதோடு தாயகம் திரும்புவதுதான் உத்தமம் !
உணர்ந்தால் உய்வுண்டு நண்பர்களே !
இந்தப் பதிவைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை blog.ல் உள்ள Post Comment பகுதியில் தயவுசெய்து பலிவிடவும்.
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !
No comments:
Post a Comment