Thursday, 16 July 2020

மகப்பேறு மருந்து...பிள்ளை பெற்ற தாய் பின்பற்ற வேண்டிய முறைகள்.. குழந்தைக்கான நெறிமுறைகள்.

            மகப்பேறு மருந்து

      ஒவ்வொன்றும் 10 கிராம் 

 

  1.        மஞ்சள்

  2.        சுக்கு -         

  3.        மிளகு-  50 கிராம்         

  4.        ஓமம்-

  5.        நறுக்குமூலம்   

  6.        அக்கரா        

  7.        சித்தரத்தை           

  8.       திப்பிலி        

  9.        சீரகம்          

10.        பெருஞ்சீரகம்          

11.        கருஞ்சீரகம்    

12.        அதிமதுரம்     

13.        சாரணவேர்           

14.        காயம்

15.        வால்மிளகு

16.        கிராம்பு                                

17.        வாய்விளங்கம்  

18.        சனிஞாயிறு

19.        ஆனைக்கொம்பு

20.        அதிவிடங்கம்   

21.       சதகுப்பை

22.        கிராணி ஓமம்                 

23.        குறுந்தட்டி வேர்

24.        நெல்லிமுள்ளி

25.      விஷ்ணு கிரந்தி

 26.        சீந்தில் கொடி

27.        கடுக்காய்

28.        ஏலம்

29.        பப்படப்புல்லு - கொஞ்சம்

30.    வெள்ளை மிளகு 

      மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்து, பெரிய வேராகவோ அல்லது தடிமனான வேராகவோ இருந்தால் நன்கு தட்டி, வெறும் வாணலியில் தனித்தனியாக இளம் சூட்டில் (simல்) நன்றாகச் சூடாகும் வரை வறுக்கவும். அதன்பின் எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து மிஷனில் கொடுத்து அரைத்து வாங்கி நன்றாக ஆறவைத்து, ஈரமோ, காற்றோ புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். கை படாமல் பத்திரமாக வைத்துக்கொண்டால் வருடக் கணக்காக இருக்கும்.

     மகப்பேறு லேகியம்   செய்யும் முறை  

 

தயார் செய்து வைத்துள்ள பொடி - 1 பங்கு

பனைவெல்லம் - 1 பங்கு

நல்ல இஞ்சி - 1\2 பங்கு

தேன் - 1\4 கிலோ

நெய் 1\2 - கிலோ

 

1.இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்விட்டு நன்கு வதக்கவும்.

 2.பனைவெல்லத்தைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இளக்கி  வடிகட்டவும்.

3.இஞ்சி ஆறியபின் மிக்ஸியிலிட்டு பனைவெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைக்கவும்.

4.ஒரு அகலமான அடிகனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமுள்ள பனைவெல்லப்பாகை ஊற்றவும். பின்னர் மருந்துப்பொடி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கட்டியின்றி கிளறவும்.

5.நன்கு திரண்டு வந்ததும் - அல்வா பதம் - மீதமுள்ள நெய் மற்றும் தேன் சேர்த்து இறக்கவும்.

6.நன்கு ஆறியபின் எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

     தயவுசெய்து பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டாம்.

7.காலை மற்றும் இரவு 2 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டுவர உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்; தாய்ப்பால் பெருகும்; கர்ப்பப்பை சுருங்கும். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் மாத விலக்கில் எந்தத் தொந்தரவும் நிச்சயம் வராது.

       திருநெல்வேலிப் பக்கம் பேறுகாலத்தின்போது இந்த மருந்தைப் பயன்படுத்துவர். 

            இதே பொடியைச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும்போது நமக்கும் நல்ல மருந்து. அலைச்சலினாலோ அல்லது அதிக வேலை பளுவினாலோ ஏற்படும் அதீதமான உடல் வலி ஏற்படும்போது தேவையான அளவு பனைவெல்லத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு சில நிமிடங்கள்  கொதிக்க வைத்து, சற்று ஆறியதும் வடி கட்டாமல், அப்படியே குடிக்க உடல்வலி போயே போய்விடும். குழந்தைகளுக்கும் அளவைக் குறைத்துக் கொடுக்கலாம். சிறிதும் பயம் வேண்டாம். பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ கிடையாது. சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்; அதற்கும் பயம் வேண்டாம். வயிறு சுத்தமாகிவிடும். அளவுக்கு அதிகமாகப் போனால் மட்டும் அதை நிறுத்த முயலுங்கள்.

       

      ஒருநாள் விட்டு ஒருநாள் தாய் சிறிது சீரகம் நாலைந்து மிளகு சேர்த்துச் சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலைமுதல் கால்வரை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். 

      குளித்த பின் கட்டாயம் சாம்பிராணிப் புகை போட்டுக் கொள்ள வேண்டும்.

       பதினாறு நாட்கள் கட்டாயம் இவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்.

       

        ×××××××+++++++×××××

 

          மகப்பேறு ஆனதும் பின்பற்றப்பட வேண்டிய முறைகள்

       தாய் சாப்பிட வேண்டிய உணவுகளும்.. முறைகளும்:

   காலை : எழுந்தவுடன் பால் அல்லது காஃபியுடன் 2 - 3 ரொட்டித் துண்டுகள்.

    08 - 08.30 -   3 இட்லி 

தொட்டுக்கொள்ள : மிளகுப்பொடி 

   செய்முறை -

மிளகு - 1 பங்கு

உளுந்தம் பருப்பு - 2 பங்கு

கறிவேப்பிலை - 2 பங்கு

பூண்டு - 2- 3 பற்கள்

உப்பு - தேவையான அளவு.


ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வறுத்து நன்கு பொடித்து எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

  இட்லியுடன் இந்தப் பொடியை நல்லெண்ணெய் அல்லது நெய் நிறைய சேர்த்துச் சாப்பிடவும்.

தேவைப்பட்டால் இட்லி சாப்பிட்ட பின் பால் (சின்ன டம்ளர்) குடிக்கலாம்.

சாப்பிட்ட பின் 2 - 4 வெற்றிலை களிப்பாக்குப் பொடியுடன் சுண்ணாம்பு சேர்த்துக் கட்டாயம் போட வேண்டும்.


மதியம் -12.30 - 01.00 


குழைய வேக வைத்த புழுங்கல் அரிசி சாதம் - 1 கப்

பத்தியக் குழம்பு :

    குழம்புக் கரண்டிக்கு ஒரு கரண்டி மிளகு

சீரகம் - 2 tb.sp.

கருவேப்பிலை - 1 கொத்து

புளி - 1சின்ன எலுமிச்சை அளவு

மேலே சொன்னவற்றை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அடுப்பை மிதமாக வைத்து நன்கு வறுக்கவும்.

ஆறியதும் நன்கு விழுதாக அரைக்கவும்.

சின்ன வெங்காயம் கொஞ்சம் மற்றும் பூண்டு நிறைய - இவற்றை நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி ஆறவைத்து எவர்சில்வர் டப்பாவில் வைக்கவும்.

கைபடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். 3- 4நாட்கள் வைத்துக் கொள்ளலாம்.

தொடுகாய் - பிஞ்சான கத்தரிக்காய்.. அவரைக்காய் மற்றும் புடலங்காய் பொரியல் அல்லது பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு : இவற்றை மட்டுமே 16 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

தேங்காய் சேர்க்கக்கூடாது.


துவையல் : பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து இரண்டு பற்கள் பூண்டு.. உப்பு.. விதைகள் நீக்கிய வரமிளகாய் ஒரு சின்னத்துண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.

(பச்சைமிளகாய் கூடாது)


பத்திய ரசம் : ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை சற்றே சூடேற்றி விட்டு ஒரு ஸ்பூன் மிளகு.. ஒரு ஸ்பூன் சீரகம்.. அரை ஸ்பூன் கொத்தமல்லி விதை - இவற்றுடன் நன்கு அரைத்துக் கொதிக்க விட்டு இறக்கி நெய்யில் கடுகு மட்டும் தாளிக்கவும்.


சாப்பிட்ட பின் 10 - 15 வெற்றிலைக் கட்டாயம் போட வேண்டும்.

நிறையத் தண்ணீர் குடிக்கக் கூடாது.

அதற்குப் பதில் தான் வெற்றிலை.

வெற்றிலை - ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

களிப்பாக்கு - வயிற்றுக் கழிவுகளை நீக்கும்.

சுண்ணாம்பு - பேறு காலத்தில் இழந்த இரத்தத்தை ஈடு செய்யும்.


மாலை 4-4.30 பால் அல்லது காஃபியுடன் 2-3 ரொட்டித் துண்டுகள்.   

    இரவு 07.30-08 மணிக்கு.

  3- 4 இட்லியுடன் இட்லிப் பொடி அல்லது பாசிப்பருப்புத் துவையல்.

சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால்.

 படுக்கும் முன் 5-7 வெற்றிலை போட வேண்டும்.

               +++++++++++++


பொதுவாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.


தாய்.. குழந்தை இருவருக்கும் குளித்த பின் சாம்பிராணிப் புகை போட வேண்டும்.


     குழந்தைக்கு நாள்தோறும் காலையில் தேங்காய் எண்ணையை லேசாகச் சூடேற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தளதளவென்று தேய்த்துக் காலை இளவெயிலில் காட்ட வேண்டும்.

         காலை 10.30 - 11 மணியளவில் வெந்நீரில் குழந்தையை இளஞ்சூடு ஏற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் தேய்த்து…நன்கு கைகால்..விரல்கள்.. முதுகு… தொடைகள் என்று நீவி விட்டு சுத்தமான கடலமாவு தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.

குளிக்க வைத்தபின் இரண்டு காதுகளையும் ஊதிவிட வேண்டும்.

       சாம்பிராணி போட்டு முடித்ததும் கீழே குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை உரை மருந்தைக் கொடுக்க வேண்டும்.

  1. வசம்பு ( இதைப் பேர் சொல்லாதது அல்லது பிள்ளை வளர்த்தி என்றும் கூறுவர்.)  இதை நல்லெண்ணெய் விளக்கேற்றி அதில் நன்கு கருகச் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. சுக்கு - இதையும் வசம்பு போல் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. ஜாதிக்காய்

  4. மாசிக்காய் - இவை இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டுச் சோறு நன்றாகக் கொதித்துக் கொண்டு இருக்கும் போது அதில் போட்டு ஒரு பத்து நிமிடம் சூடேற்றி.. பின் சுத்தமான தண்ணீரில் கழுவித் துடைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. மிளகு - ஒரு மிளகை தையல் ஊசியில் குத்தி தணலில் காட்டிச் சுட்டு வைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒரு சுத்தமான எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

       தாய்ப்பால் சில சொட்டுகள் பீய்ச்சி எடுத்து சுத்தமான உரைகல்லில் இவை அனைத்தையும் தாய்ப்பால் தொட்டு ஒவ்வொரு இழுப்பு இழுத்து (அதாவது உரத்து)க் குழந்தைக்குப் போட்ட வேண்டும்.

      உரைத்த பின் ஒவ்வொரு முறையும் அந்தப் பொருட்களை நன்றாகச் சுத்தமான தண்ணீரில் கழுவி… சுத்தமான வெள்ளைத் துணியில் துடைத்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு : 

          குழந்தையைக் குளிப்பாட்ட வசம்பைப் பேருக்கு உரைத்தாற் போல்தான் உரைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் .

     இந்த உரைமருந்து குழந்தையின் உடல் முழுவதையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.

    குழந்தையைக் குளிக்க எடுத்துச் செல்லும் முன் இரண்டு அல்லது மூன்று உலர்திராட்சையை வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் செல்லவும்.

     உரைமருந்தைக் கொடுத்த பின் ஊறிய திராட்சையை நன்கு கசக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி குழந்தைக்குப் போட்டிவிட வேண்டும்.

      இது குழந்தையின் வயிற்றையும் சுத்தப்படுத்தி விடும்..நெஞ்சுச் சளி கட்ட விடாது.


    தாய் புளிப்பு அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடக்கூடாது. அதனால் தான் புளியை வெறும் வாணலியில் நன்கு சூடேற்றிப் பயன்படுத்துகிறோம்.

      ஆனால் எங்கள் வீடுகளில் அவரவர் வழக்கப்படி என்னவெல்லாம் சாப்பிடுகிறோமோ அவை அனைத்தையும்… மாம்பழம்.. பலாப்பழம் உட்பட அனைத்தையும் சிறிது சிறிது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றாய் உணவோடு சேர்த்துக் கொடுத்து விடுவார்கள்.

     ஏனெனில் பின்னாளில் பிள்ளையின் வயிற்றுக்கு எல்லாம் ஒத்துக் கொள்ளும்.


     தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகங்களைப் பிதுக்கிக் கட்டுப்பாலைப் பீச்சி எடுத்து விட வேண்டும்.

      பால் கொடுக்கும் முன் சுத்தமான வெள்ளைத் துணியால் மார்பகங்களை நன்கு அழுத்தித் துடைத்து விட வேண்டும். 

     கட்டாயம் இரண்டு பக்கமும் பாலூட்ட வேண்டும்.

     தாய் படுத்துக்கொண்டு ஒருபோதும் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.

பிள்ளைக்குப் புரையேற வாய்ப்புகள் அதிகம்.

      

     எவ்வளவுக்கு எவ்வளவு தாயும் சேயும் சுத்தமாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எந்த நோயும் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.


     எப்பொழுதேனும் தாய் குளிருவது போல் உணர்ந்தால் பத்து மிளகைப் பனைவெல்லம் சேர்த்து நன்கு பொடித்து வாயிலிட்டு மெதுவாக அந்தச் சாற்றை இறக்கவும்.

     

  நல்வாழ்த்துக்கள் பிள்ளைகளா !





 

 


காமராஜர்...

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே 
https://youtu.be/xV8Cpt_cK3g
தமிழகம் மீள வேண்டும் !
இந்த லின்க்கைத் தயவுசெய்து அனைத்து நண்பர்களும் பார்க்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு !

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு...

சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது.

ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன்.

அதைக் கேட்ட நண்பர், "ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே" என்று பரபரக்க கேட்டார். "இருக்கலாம்ங்க..ஏன் கேக்குறீங்க" என்றதும், "டாக்டர் மசாரு இமோடோ பற்றி தெரியுமா? கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்று கேட்டுவிட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.

டாக்டர் மசாரு இமோட்டோ (Dr.Masaru Emoto). ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய ஆராய்ச்சியாளர். தண்ணீர் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம். இவர் தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிகட்டுரைகளை, புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் தனக்குத் தரப்படும், தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும். அதை வெளிப்படுத்தவும் செய்யும். .

ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில், அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது. அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அதே ஜாடி தண்ணீரை எடுத்து- எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம் என்று பழித்து, கோபத்தையும், கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது, அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோ வின் ஆராய்ச்சிகளில் நிருபணமாகியுள்ளது.

உலகளவில் எல்லா மதங்களிலும் தண்ணீருக்கு என்று தனி இடம் உள்ளது. யோர்டான் நதிக்கரையில் இயேசுவிற்கு ஞானஸ்னானம் தரப்பட்டதும் தண்ணீரால் தான்.

பள்ளிவாசல்களில் ஓதிவிட்டு பின் தெளிப்பதுத் தண்ணீரால் தான்.

இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை. யாகம் முடிந்து, ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத் தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.

பெரிய ஞானிகள், முனிவர்கள் தவம் செய்தது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரைகளில் தான்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.

தண்ணீருக்கு ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குள் தரப்படும் நன்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு தந்துவிடும். பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.

ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம். அதாவது energy conversion law.

மழையும் கூட ஆற்றலின் வடிவம் தான். அது தனக்குள் இயற்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்து பூமியில் தெளிக்கிறது. அதனால் தான் பயிர்கள் செழிக்கின்றன. உயிர்கள் செழிக்கின்றன.

அதே மழை அளவுக்கதிகமாக பெய்யும் போது வெள்ளம் வருகிறது. எது அளவு, எது அளவுக்கு அதிகம் என்று தீர்மானிப்பது இயற்கை தான். அந்த தீர்மானத்தை ஒரு தகவலாக மழையின் துளிகளில் பதிய வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது இயற்கை.

கெடுப்பதும் கெட்டாருக்கு சார்வாய் மற்றாங்கே, எடுப்பதும் எல்லாம் மழை--என்கிறார் வள்ளுவர். கொடுப்பதும் மழை, கெடுப்பதும் மழை என்கிறார்.
இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட ஆற்றை அதன் தண்ணீரைத் தான் நாம் பல வழிகளில் பாழ்படுத்துகிறோம். எப்படியெல்லாம் கெடுத்து நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்.

இறுதியாக,உறுதியாக ஒன்று,

மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது. மனித மூளை 90% தண்ணீரால் ஆனது. தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும்.

எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்.....

(The Magic of Water,Doctor Masaru Emoto என்று இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.)

முகநூலில் கிடைத்தது.

அன்பு நண்பர்களே !
அதனால் தான் நமது முன்னோர்கள் ஆறுகள்..ஆற்றங்கரைகள் ஆகியவற்றிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஆறுகளைத் தெய்வமாக வணங்கினார்கள்.
இன்றும் ஆடிப் பதினெட்டு அன்று ஶ்ரீரங்கம் எம்பெருமான் காவிரிக்கரை அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு எல்லா வகையான வழிபாடுகளும் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது அன்பர்களே !
அதோடு மட்டுமின்றி இயற்கையில் தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு.. அவைகளும் நமது பேச்சிற்கு எதிர்வினை ஆற்றுகின்றன என்று ஆவிகள் உலகம் திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் ஒரு காணொளியே வெளியிட்டிருக்கிறார்.
தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றிகள் சமர்ப்பிக்கும் நன்னாள்.
திருக்கார்த்திகை அக்னி பகவானை வழிபடும் திருநாள்.
ஆடிப் பதினெட்டு காவிரித் தாயின் திருவடிகளை வணங்கும் நாள்.
இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு மீண்டும் திரும்ப நாம் முயற்சிக்க வேண்டும் அருமையானவர்களே ! நமது பாரத நாட்டு முன்னோர்கள் அனைத்தையும்... அனைத்தையும்... அனைத்தையும் நமக்குப் பொக்கிஷங்களாக வைத்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள்.
உணர்வோம் !
உய்வோம் !
நன்றிகளும்...நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

Monday, 13 July 2020

ஓமம்

குழந்தைகளுக்கு நன்கு பசி எடுக்க..

ஓமம் - 1 டீஸ்பூன்

கசகசா - ½ டீஸ்பூன்

காலையில் ஊறவைத்து இரவில் நன்கு அரைத்து பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.

வாரத்தில் 3 நாள் தொடர்ந்து 3 வாரம் கொடுக்க நன்றாகப் பசி எடுக்கும்.

          ×××××++++++××××××

ஓமக்களி : செரிமான சக்தியை அதிகரிக்க..

அரை டம்ளர் ஓமத்தை நன்றாக உமி போகச் சுத்தம் செய்து அரைமணி நேரம் ஊறவைத்து.. நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 100-150 gm. கருப்பட்டி (பனைவெல்லம்) தட்டிப் போடவும். கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து.. பனைவெல்லக் கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ஓம விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பைக் குறைந்த தணலில் (keep the Stove in Sim position) வைத்துச் சிறிது நேரம் கிளறவும். தளதளவென்று வரும்போது தேவையான அளவு நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆறியதும் கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் சேகரித்து வைக்கவும்.

தயவுசெய்து பிளாஸ்டிக் டப்பாவைத் தவிர்க்கவும்.

இது செரிமானத் தன்மையை நன்கு அதிகரிக்கும்.

நான் ஒரு அளவு(அரை டம்ளர் என்று) சொல்லி இருக்கிறேன். நீங்கள் தேவைக்கேற்ப அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் : ஓமத்தை நன்றாக உமி போகக் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் சிலருக்கு அதனால் வயிற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கைபடாமல் , தண்ணீர் படாமல் வைத்துப் பழக வேண்டும். இது நமது நாட்டு மருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு முக்கியமான விதி !

நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !



நெஞ்சுச் சளி கரைய

நெஞ்சுச் சளி கரைய

அருமை அன்புப் பிள்ளைகளா !

நான் எங்கள் வீட்டில் காலங்காலமாக நாட்பட்ட சளி இருமலைக் குணமாக்க ஒரு எளிய மருந்து சொல்கிறேன்.. கேளுங்க நண்பர்களே !

1)வெற்றிலை - 1 - 2

2) பூண்டு - 2பற்கள்

3 ) சுக்கு - ஒரு சிறிய துண்டு

4 )  மிளகு - 3 - 4

5 ) சீரகம் - அரை டீஸ்பூன்

6 ) ஓமம் - அரை டீஸ்பூன்

7 ) வேப்பிலைத் துளிர் - சிறிது

  எல்லாவற்றையும் நன்கு மசிய விழுதாக அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட நெஞ்சுச் சளி இளகி மலத்துடன் வெளியேறிவிடும்.

சிலருக்கு வாந்தி எடுத்து சளி வெளியேறி விடும்.

பக்க மற்றும் பின் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படாது. இது அனுபவ உண்மை.

குழந்தைகளுக்குத் தேன் கலந்து கொடுக்கலாம்.

ஒரு வயது அல்லது இரண்டு வயதுக் குழந்தைகள் என்றால் சங்கில் (பாலாடை என்றும் சொல்வார்கள்) போட்டிவிடலாம்.

பயப்பட வேண்டாம்.. நண்பர்களே !

நல்வாழ்த்துக்கள் !

நாள்பட்ட சளி.. வரட்டு இருமல்..இவற்றால் ஏற்படும் காய்ச்சல் குணமாக..

நாள்பட்ட சளி..வறட்டு இருமல்.. அவற்றைத் தொடரும் காய்ச்சல் குணமாக...

   காலங்காலமாக எங்கள் வீடுகளில் அளிக்கப்படும் சளி..இருமல் அவற்றினால் ஏற்படும் காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டுவரும் எளிமையான கைமருந்து !         நாள்பட்ட சளி..வறட்டு இருமல்.. திரும்பத்திரும்ப இந்தக் கட்டுச் சளியினால் ஏற்படும் காய்ச்சல் கூட இந்த மருந்தினால் குணமாகிவிடும்.

1.சுக்கு

2.அக்கரா

3.சித்தரத்தை

4.நறுக்குமூலம் 

5.கருடக்கொடி

6.அதிமதுரம்

7.கிராம்பு

8.வால்மிளகு 

   இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம் - இவை எல்லாம் தடித்த வேர்கள். அவை பிளக்குமாறு தட்டிக் கொள்ள வேண்டும்.

     அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து, நன்கு சூடேற்றி, அடுப்பை சிம்மில் (Keep the gas stove in the sim position) வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (கை பொறுக்கும் சூடு போதும்) .

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.       

   இதோடு ஒவ்வொரு கைப்பிடி துளசி, தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை இலைகள் நொச்சி இலைகளை நன்கு சுத்தம் செய்து,  நிழலில் உலர்த்திப் பொடித்து  மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.  காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும். 

      ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

       மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது. எப்பேர்ப்பட்ட சளியையும் அறுத்து வெளிக் கொணர்ந்து விடும்.

     குழந்தைகளுக்கு வயதுக்கேற்றாற்போல் அளவைக் குறைத்து, தேனில் கலந்து கொடுக்கலாம். 

      பக்க விளைவுகள்.. பின் விளைவுகள் அறவே கிடையாது.

நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

Saturday, 11 July 2020

அழ அழச் சொல்பவன் ஆகாதவன்

ஜெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.. 

ஜெங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான். பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.

ஒரு நாள் ஜெங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள். ஜெங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான். ""என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான். அவன் குதிரையில் பயணித்த போது பருந்து கம்பீரமாக அவன் 

முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.

பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் ஜெங்கிஸ்கான். அந்தக் குல்லா தலையில் 

இருக்கும்வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லக் கூடாது. அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான் ஜெங்கிஸ்கான். பருந்து பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி 

வைக்கும்.

அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. ஜெங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான். பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது. 

ஜெங்கிஸ்கானும் நண்பர்களும் களைப்பு வரும்வரை வேட்டையாடினார்கள். விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் 

ஜெங்கிஸ்கான் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான். மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. 

ஜெங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது. நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான். அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது. தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது. இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

""இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன். இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.''

ஜெங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்துத் தன் வலக்கையில் பிடித்துக் கொண்டான். பருந்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். "இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ நீ செத்தாய்' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான். வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது. 

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். பருந்து மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன். பருந்து வெட்டுண்டது. என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.

பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. சொட்டிக் கொண்டிருந்த நீரின் 

வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான். பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி

இருந்தது. அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.

அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும். மன்னன் அந்த நீரை உண்டிருந்தால் உடனே செத்திருப்பான். அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான ஜெங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான். 

நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்தில் ஒரு பருந்தைச் செய்து வைத்தான். அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.

""கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.''

மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது

""உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான்.''

ஜெங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.

இதோ ஒரு கொசுறு கதை!

ஒரு செயலை எடை போடும் போது அந்தச் செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும். நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள். அதற்காக அவர்களை விட்டு விலகிச் சென்று விடக் கூடாது. நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

      படித்ததைப்              பதிவிடுகின்றேன்

உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து கமெண்ட் பகுதியில் பதிவிடவும்.

நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

வாழிய பாரத மணித்திருநாடு !


Thursday, 25 June 2020

தமிழின் அழகு !

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் !
இன்று படித்ததில் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன் அன்பு 
நண்பர்களே !

இதப்படிங்கவே...!!!

🙏💫🙏💫🙏💫🙏💫🙏💫🙏

⚜ *"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.*

⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*

⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.* 

⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*

⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*

⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*

⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*

⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*

⚜ *கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.*

⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*

⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*

⚜ *ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.*⚜

*வாழ்க தமிழ்!*✍

Saturday, 13 June 2020

முட்டாள் யார் ? மடையன் யார் ?

அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற

வாழ்வதற்கே !

அன்பு நண்பர்களே !

 தயவுசெய்து அறிவு கெட்டவர்களைக் குறிக்க இனிமேல் " முட்டாள் "மற்றும் 

" மடையன் "  என்ற சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்.

    தேரோட்டங்களின் போது அதன் வேகத்தைத் தடுக்க பெரிய உருட்டுக் கட்டையைப் பயன்படுத்தி முட்டுக் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை எல்லோராலும் செய்ய முடியாதாம். அதற்கென்று சில வலிமையான.. கைதேர்ந்த ஆட்கள் இருப்பார்களாம். அவர்களைத் தான் "முட்டுக் கொடுக்கும் ஆள்" என்ற பொருளில் " முட்டு ஆள்.. முட்டு ஆள் " என்று அழைக்கப்பட்டுக் காலப்போக்கில் அது மறுவி

" முட்டாள் " என்று ஆகிவிட்டதாம்.

   அதேபோல் பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் ஏரிகள்.. கண்மாய்கள்.. பெரிய குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் அவற்றிற்குக் கீழே அடியாளத்தில் இருக்கும் மடைகளைத் திறந்து நீரை மடைமாற்றிவிட என்று சில பயிற்சி பெற்ற... திறன் வாய்ந்த ஆட்கள் இருப்பார்களாம்.. அந்த நீர்நிலைகளில் குதித்து.. உள்ளே அடியாழம் வரை நீந்திச் சென்று மிகச்சரியாக அந்த அடைத்து வைத்திருக்கும் மடைகளைத் திறந்து விடுவார்களாம் அந்த மாபெரும் மனிதர்கள். 

இதில் அவர்கள் தங்கள் வேலையைக் கனக்கச்சிதமாகச் செய்தாலும் அந்த நீரின் அழுத்தம் மற்றும் அதிவேகத்துடன் போட்டி போட முடியாமல் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு நிறையப் பேர் தங்கள் இன்னுயிரை இழந்து விடுவார்களாம்.

அந்த மனிதர்களைத் தான் "மடையர்கள் " என்று அழைப்பார்களாம்.

அப்படி அவர்கள் வெள்ளப் பெருக்கில் குதிக்கும் முன் தங்கள் அம்மா அப்பாவிடம் ஆசி பெற்று விட்டு..‌‌‌‌  திருமணம் ஆகி இருந்தால் மனைவிக்குத்‌ தைரியம் சொல்லி விட்டுத் தான் வெள்ளத்தில் குதிப்பார்களாம்.

புகழ்பெற்ற  திருமதி ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறியுள்ளார்கள். " அதனால் முட்டாள்.. மடையன் என்று அறிவில்லாத மனிதர்களைக் குறிக்க இந்தப் பதங்களைப் பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து.." என்ற அவரின் பேச்சைக் கேட்டபின் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். தயவுசெய்து தாங்களும் நிறுத்தி விட்டு.. தங்களது நண்பர்களிடமும் இதைப் பகிரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அருமை நண்பர்களே!

Tuesday, 2 June 2020

உருவம் வேறு.. உள்ளம் வேறு !

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

   அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !

 தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு பத்திரிக்கை குடுத்துட்டுப்போச்சு. தெனம் காலையில கூடையில கீரக்கட்டு முருங்கக்கா வாழக்கா மாத்திரம் கொண்டாரும். கீரக்கட்டு 25 ரூ முருங்கக்கா கட்டு 25 ரூ வாழக்கா 3 , 25 ரூவான்னு குடுக்கும்

பழைய லேசா கிழிஞ்ச சேலை கட்டிருக்கும் அள்ளி முடிஞ்ச தலை. எண்ண பாக்காத முடின்னு பாக்கவே கஷ்ட்டமா இருக்கும்.

கீரக்கட்டோட பத்திரிக்க குடுக்கக்கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டுப்போச்சு. இதுமாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல. அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு. 

ஆனா கலியாணத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து "அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன் கலியாண வேலை இருக்கு" ன்னு சொல்லிட்டுப் போச்சு. 

நான் "ஏதாவது பணத்த கவர்ல போட்டுக்குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போகமுடியாது அன்னிக்கி எங்க ஆபீசுல என்னோட பாஸ் மகளுக்குக் கலியாணம் அங்க போகனும் அவர் கண்டிப்பா வரனும்ன்னு சொல்லிருக்காரு" ன்னு சொன்னேன். 

அதுக்கு என்னோட சம்சாரம் கேட்டா " நீங்க மொத நா ரிசப்ஷன் தானே போவீங்க.. மறுநாள் ஞாயத்துக்கெழமதான்.. பக்கத்துக்‌ கிராமத்துல அவங்க வீட்டுலதான் கலியாணம். "போய்த் தலையக் காட்டிட்டு வரலாம்ன்"னு சொன்னா. 

அதுக்கு அவ சொன்ன காரணம்  "அந்தம்மா கிட்டத்தட்ட பத்துவருசமா கீரை குடுக்குது.. நல்ல பழக்கம்"ன்னா. மேலிடத்தின் பேச்சை மீற முடியுமோ... சரின்னு ஒத்துக்கிட்டேன். 

வழக்கம் போல ஆபீஸ்ல வேலைசெய்யிற வங்களோட ஒன்னா வேன் புடிச்சி பாஸ் வீட்டுக் கலியாணத்துக்குப் போனோம். 

அங்க சரியான கூட்டம். பாஸ் மாப்பிள்ள வீட்டு ஆளுகளை கவனிக்கிறதுல பிசியா இருந்தாரு. 

வரிசையில நின்னுட்டு இருக்கும் போதே குறுக்க குறுக்க மாப்பிள்ள வீட்டு ஆளுங்கன்னு கும்பல் கும்பலாப்  போய்ட்டு இருந்ததால லேட்டாகி.. ஒருவழியா கை குடுத்துட்டு இருக்குறப்ப யாரோ வர.. எங்களை அம்போன்னு விட்டுட்டு பாஸ் அவர்கிட்ட ஓடினாரு. 

நாங்க ஃபார்மாலிட்டிக்கு நின்னு போட்டோ எடுத்துட்டு சாப்பிடப்போய்.. அங்க எடம்புடிச்சி சாப்பிட்டுட்டு.. வீடு‌ வாரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு.

மறுநாள் காலையிலதான் கீரக்காரம்மா வீட்டுக்கலியாணம். சம்சாரம் பட்டுசேலை ரெண்டு இஞ்ச் பார்டர் போட்டது கட்டிக்கிட்டு கொஞ்சமா நகை போட்டுக்கிட்டுக் கெளம்புனா. 

கார் எடுத்துக்கலாமான்னு கேட்டப்ப " வேணாம் . நாம ரொம்ப பகட்டா அங்க போகப்படாது.. அவங்களே சுமாராத்தான் இருப்பாங்க.. அளவோட இருக்குறது தான் நல்லது. நம்மமேல கண்ணு பட்டுடும்"ன்னு சொன்னா. 

அப்பீல் கெடையாது . 

நானும் பைக் எடுத்துட்டுக்‌ கெளம்புனேன். கவருல 201 போட்டு சீல் பண்ணி எடுத்துட்டுப் "போதும் அவங்களுக்கு இதுவே பெருசு"ன்ற எண்ணத்துல போனோம்.

அந்த ஊரு மெயின் ரோட்டுல இருந்து உள்ளாற மூணு நாலு கிலோ மீட்டர் இருக்கும். மெயின் ரோட்டில இருந்து தோரணம் கட்டிருந்துச்சு. வேற எதுவும் விசேஷம் போலன்னு நெனச்சிக்கிட்டேன். போகப்போகத் தான் தெரிஞ்சது இதெல்லாம் அந்தக் கீரக்காரம்மா வீட்டுக் கலியாணத்துக்காகத் தான்னு..

ஊரு பூரா வாழ்த்துப்‌ போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிருந்துச்சு. போகப்போக வரிசையா விலை உயர்ந்த காருக நின்னுச்சு. எல்லாம் கலியாணத்துக்கு வந்தது போல.

கலியாணம் நடக்குற வீடுன்னு சொன்னா அடிச்சிப்புடுவாங்க.. அவ்வளவு பெரிய பங்களா. தெருவே அடைச்சிப்பந்தல் எக்கசக்கக்கூட்டம். ஒரே பட்டுச்சேலை பெண்கள் . அவங்களோட கம்பேர் பண்ணிப்பாத்தா நாங்க ரொம்ப சுமார். 

உள்ளாற விடுவாங்களோன்ற மாதிரி எனக்கே கூச்சமாப்போச்சு. வெளிய தயக்கத்தோட நின்னப்ப கீரக்காரம்மா தச்செயலா வெளிய வந்துச்சு. இவங்களைப்பத்துட்டு நேர இவங்க கிட்ட வந்து "வாங்கய்யா"ன்னு கூப்டுட்டுப் போச்சு. 

எனக்கு அடையாளமே தெரியல. அரையடி பாடர் பட்டுச்சேலை. கை கழுத்து பூரா நகைகள்.

பெரிய ஜமீன் தாரம்மா மாதிரி ஜொலிச்சிச்சி. உள்ளார கூட்டிட்டுப் போய் எல்லா பட்டுச்சேலைக்காரங்களையும் ஒதுக்கி விட்டுட்டு மணமக்களை கூப்புட்டு கால்ல விழுகச் சொல்லிச்சி. 

"அய்யா ஒங்களப் போலப் படிச்ச பெரியவுக ஆசீர்வாதம் பண்ணனும்"ன்னு சொல்லிச்சி. நாங்க ஆசீர்வாதம் பண்ணுனோம். கொண்டு போயிருந்த 200 ரூவா கவர் கூசிச்சு. எப்புடிக் குடுக்குறதுன்னு யோசனை வந்துச்சு. வேற வழியில்லாம குடுத்துட்டு.. திரும்புனவன "வாங்கய்யா"ன்னு கூட்டிட்டுப் போய்த் தனியா டேபிள் ஒதுக்கி.. பக்கத்துல நின்னு சாப்பாடு பரிமாறி.. சாப்புட வச்சி கெளம்பும் போது தாம்பூலப்பைன்னு ஒண்ணு குடுத்துச்சு. 

" ரொம்ப சந்தோசமுய்யா.. நீங்க வந்துதுல"ன்னு நெறஞ்ச சந்தோசத்தோட வழி அனுப்புச்சுச்சு. 

வீட்டுல வந்து தாம்பூலப் பையப் பிரிச்சா அதுக்குள்ள வெள்ளில சிமிழ்கள் ரெண்டு இருந்துச்சு.

எனக்கு ஒருமாதிரி ஆகிப்போச்சு. இது புரியவே இல்ல. அப்பத்தான் அவங்க குடுத்த கலியாணப்‌ பத்திரிக்கையப் பிரிச்சி படிச்சா அதிர்ந்து போனேன். 

அந்த ஊருல பெரிய‌ வெவசாயக் குடும்பம் அது. மகன் பேருக்கு நேர M.Sc (Agriculture) ன்னும் பொண்ணு பேருக்கு நேரயும் M.Sc (Agriculture)ன்னும் போட்டிருந்துச்சு. சொந்தக்காரங்க எல்லாம் பெரிய படிப்பு.. பதவில இருக்குறதும் தெரிஞ்சது,

அடுத்தவாரம் ஞாயத்துக்கெழம.. அதே கீரக்காரம்மா பழையபடி கீரைக் கூடையோட வந்துருச்சு. 

என்னால ஆவல அடக்கமுடியல இத விசாரிக்கணூன்னு தோணிச்சு . 

அவங்களை வீட்டுக்குள்ளக் கூப்புட்டு ஒக்காரவைச்சி மரியாதையோட விசாரிச்சப்ப அந்த அம்மா சொல்லிச்சி.

" உங்களுக்குச் சந்தேகம் வந்தது ஞாயம்தான். நாங்க அந்த ஊருல வெவசாயக் குடும்பம். அஞ்சு ஏக்கரு கீரை பயிரிட்டு இருக்குறோம் மகன் தான் படிச்சிட்டு வெவசாயத்துக்கு ஒதவி பண்ணுறான். அந்த விவசாயக்கல்லூரிலதான் வேலைபாக்குறான். பொண்ணும் அதேகல்லூரிதான். அவளுக்கும் வெவசாய்த்துல ஆர்வம் அதுனாலதான் காதல் கலியாணம். முறையா வெவசாயம் செஞ்சி தரகர் இல்லாம நாங்களே வியாபாரமும் பண்ணுறோம்.

காலையில வேன்ல கொண்டாந்து எறக்கி தனித்தனியா கூடையில சொமந்து விக்கிறோம் . நான் ஆர்வத்தோட நடந்து விக்கிறதால ஒடம்பும் நல்லாருக்கு. லாபமும் கெடைக்கிதுன்னு சொல்லிச்சி.

தோற்றத்தப் பத்திக் கேட்டேன். "ஏன் அங்க ராணிமாதிரி இருந்த நீங்க இங்க கீரை விக்கிறப்ப இப்புடி..."ன்னு கேட்டேன்

அதுக்கு சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி "கீர விக்கிறப்ப பட்டுச்சேலையும் நகைநட்டோட வந்தா நல்லாருக்குமா ? ஆராவது வாங்குவாகளா?ன்னு.

அப்ப தோணுச்சு.. சும்மா 40ஆயிரம் மாசச் சம்பளம் வாங்குற நாம என்னா அலட்டு அலட்டுறோம்னு  ? அத‌ நெனைக்கிறப்ப வெக்கமா இருந்துச்சு.

அந்த விவசாயத் தாயக் கையெடுத்துக் கும்புடத் தோணிச்சி. 

*உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்* என்ற அய்யன் குறள் நெனவுக்கு வந்துச்சு.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்.

    மேலே உள்ளது எங்கள் நண்பர் எனக்கு whatsappல் அனுப்பியது.

    ஒரு பழைய பாட்டு ஞாபகம் எனக்கு வருகிறது..

" ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து

ஆசை வைக்காதே..

ஆரவார நடையைப் பார்த்து மயக்கம் கொள்ளாதே.." 

எங்கள் நண்பர்  ஒருவர் இயல்பிலேயே கோடீஸ்வரன்.. அவருடைய அப்பா ஊர்த் தலக்கட்டாக இருந்தவர். அந்த நண்பர் இன்று எங்கள் மாவட்டத்தில் ஒரு புள்ளி..

EDP (Entrepreneur Development Program) பல கல்லூரிகளில் எடுப்பவர். சிறுகுறு தொழில் மையத்தில்...மாவட்டத் தொழில் மையத்தில்..மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் என்று பல விதங்களில் பொறுப்பில் உள்ளவர். 

    எப்போதும் ஒரு ஸ்கூட்டரில் தான் வருவார். மனைவியுடன் வந்தாலும் அப்படித்தான்.

இவர்களைப் போல் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

       திரு. ஜெகன்னாதன்.. திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் - இருவரும் சமூக சேவகர்கள்..

திரு.ஜெகன்னாதன் தமிழக சர்வோதயாவில் ஒரு முக்கியமான மனிதர்.

https://www.rediff.com/news/2008/oct/01award.htm

  இந்த லின்க்கைத் தயவுசெய்து அனைவரும் பாருங்கள்.  விவசாயக்கூலி மக்களுக்காகப் போராடி எத்தனை எத்தனையோ கிராமங்களில் அந்தப் பிரிவின மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர்கள். 

நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ஒரு நல்ல தொண்டு நிறுவனத்திற்குச் சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர். பூமிதான இயக்கத்தில் இருந்து எங்கள் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட இரண்டேகால் ஏக்கர் நன்கொடையாகப் பெற்றுத் தந்தவர்கள்.

அந்த அம்மா நேரில் பார்த்தால் விவசாயக்கூலி செய்யும் பெண் போல இருப்பார்கள்.

மிகமிக மிகமிக எளிமையான ஆத்மாக்கள்.

திருமதி.கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு 2008ல் Alternate Nobel பரிசு தேடி வந்தது.

சென்ற வருடம் பத்மபூஷன் விருது இவரைத் தேடி வந்து தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டது.

நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இவர்களைப் போன்ற மாமனிதர்கள் மறக்க முடியாத.. மறக்கக் கூடாத சமூகப் போராளிகள் !

அவர்கள் பாதங்களில் பணிகிறேன்!

வாழிய பாரத மணித்திருநாடு !

Saturday, 30 May 2020

தவணை முறையும்.. தத்தளிப்பும்

    வல்லமை தாராயோ இந்த              மாநிலம்  பயனுற        வாழ்வதற்கே!  

        தவணை முறையும்…                         தத்தளிப்பும் !

    சமீப காலங்களில் நான் அவதானித்து வரும் ஒரு விஷயம் மக்களிடையே சேமிப்புப் பழக்கம் குறைந்து வருவது.. அல்லது அறவே இல்லாதது. 

   " பத்து ரூபாய் சம்பாரிச்சாலும்.. பத்துப் பைசா சேமிக்கணும் " ! இது எங்கள் கிராமத்துப் பாட்டி அடிக்கடி சொல்வது. 

   " இல்லே இல்லேன்னு கையில கொஞ்சம் வச்சிருக்கணும்.."  இது எங்க பெரியக்கா எப்போதும் சொல்வது. 

    அப்போது அறியா வயது. ஒன்றும் புரியவில்லை.

    ஆனால் திருமணமாகி வாழ்க்கையை என் கணவரின் மிகவும் குறைவான சம்பளத்தில் தொடங்கிய போது மெல்லமெல்ல மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது சேமிப்பின் அருமை.

    அதன்பின் சிறுகச்சிறுக சேமிக்கத் தொடங்கினேன். 

     அப்போதெல்லாம் அதாவது 1970 களின் மத்தியில் 1பைசா..2 பைசா..3 பைசா மற்றும்5..10 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அவைகளை அப்படியே ஒரு பக்கமாகப் போட்டு வைப்பது.. அன்றாடம் காய்கறி வாங்குவதில் மீதம் ஆகும் சில்லறைகளை தனியே வைத்துவிடுவது..என்று.

     வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் சேமிக்கும் அளவுக்கு வசதி கிடையாது.

ஆனால் நான் மேற்சொன்ன முறைகளில் சேமித்தவை அவசரத்துக்கு நன்கு உதவும்.

அதைத் தவிரவும் மீதமாகிறதை வைத்து எத்தனை எத்தனையோ நன்கு படிக்கும் பணவசதி இல்லாத பிள்ளைகளைப் படிக்க வைத்தோம்.

    அந்த மாதிரி மக்களுக்கு ஒரு மருத்துவ செலவு.. அவசரச் செலவு என்றால் எங்களால் தயக்கமின்றி உதவ முடிந்தது நண்பர்களே !

      இன்றும் அப்படி ₹.5 ,₹.10 இவற்றை ஓரிடத்தில் தனியே போட்டு வைப்பேன். இன்றும் அவை பணவசதி இல்லாதவர்கள் வந்து உதவி கேட்கும் போது…

" இல்லை " என்று சொல்லாமல் உதவ வழிவகுக்கிறது.

       எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் செலவுதான் ஆகும்.

       தற்காலத்தில் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் எத்தனை எத்தனையோ வகைகளில் சேமிக்க முடியும். பிள்ளைகள் படிப்பு.. திருமணம்.. மருத்துவக் காப்பீடு.. வயதான காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் நமது வாழ்வை நடத்த - இப்படி எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம். நாம் கொஞ்சம் முயல வேண்டும்.. அவ்வளவுதான் !

     அஞ்சலகங்களில் இப்போது நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. 

     இது இல்லாமல் Franklin Templeton போன்ற தனியார் வங்கிகளில் Systematic Investment Plan (SIP) அதாவது தொடர் வைப்பு சேமிப்பு (Recurring Deposit என்று பொதுவாகச் சொல்வது) என்ற முறையில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தலாம் : அன்றி மொத்தமாக ஒரே தவணையில் செலுத்தலாம்.

         முன்பெல்லாம் Provident Fund  என்பது தொழிற்சாலை ஊழியர்களுக்கு மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போதோ Public Provident Fund இருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் இதில் சேமிக்கலாம்.

    இப்படி பல வழிமுறைகள் இருக்கின்றன.

       இது தொடர்பாக நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு முக்கியமான விஷயம் - கூடுமானவரைத் தவணை முறையில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள் ! 

      இன்று நிறையப்பலர் செய்யும் மிகப்பெரிய தப்பு…தவணையில் கிடைக்கிறது என்பதற்காகத் தேவையில்லாதவைகளைக் கூட வாங்கிக் குவிப்பது. 

      தேவையில்லாதவைகளை போலி கௌரவத்திற்காகவோ அல்லது "அடுத்தவர் வைத்திருக்கிறார்..நாமும் வாங்குவோம்.." என்றோ வாங்குவது துளியும் யோசிக்காமல். 

இறுதியில் ஒவ்வொன்றாக 'இவ்வளவுதானே.. இவ்வளவுதானே ' என்று வாங்கி விட்டு மாத முதல்வாரத்தில் ஊதியம் வாங்கும்போது..(வாங்கிய பொருட்களுக்கெல்லாம் ஊதியத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பார்கள்) வாடகை..மளிகை.. பால் பிள்ளைகளின் படிப்புச் செலவுகள்.. எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள் - இப்படி கட்டாயம் கொடுக்க வேண்டிய செலவுகளுக்குக் கூடக் கையைப் பிசையும் நிலையில் வந்து நிற்போரை நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.

    On Savings : 

Don't save what is left after spending , but spend what is left after Saving.

மேலே உள்ளது திரு.வாரன் பபெஃட் (Warren Buffet)   சில ஆண்டுகளுக்கு முன் சொன்னவை... அமெரிக்க தொழில் முதலீட்டாளர் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது.

     பங்கச் சந்தை உலகத் தந்தை என்று அழைக்கப்படும் இவர் மேற்கொண்டு சொன்னதையும் இங்கே பாருங்கள் பிள்ளைகளா!

       On Earning :

Never depend on Single income. Make investment to create a Second source.

     On Spending :

If you buy things you don't need, soon you will have to sell the things you need

      On Savings : 

Don't save what is left after spending , but spend what is left after Saving.

   On Taking Risk :

Never test the depth of river with both feet.

     On Investment : 

Don't put all eggs in one basket.

     On Expectations :

  Honesty is very Expensive Gift. 

 Don't expect it from cheap people.

  எனக்கு இதில் எதுவும் புதிதாகத் தோன்றவில்லை. ஏனெனில் இவை எங்களுக்கு எங்கள் வீட்டில் அடிப்படைப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டவை...

   நாங்கள் சொன்னால் கேட்க மாட்டீர்கள்... இந்த அமெரிக்காக்காரர் சொல்வதையாவது மனதில் பதிய வையுங்கள் இளைஞர்களே !

" கல்கண்டு " என்ற தமிழ் வார இதழின் ஆசிரியர் காலஞ்சென்ற திரு.தமிழ்வாணன் (லேனா தமிழ்வாணன் அவர்களின் அப்பா ) அவர்களும் அந்தக் காலத்திலேயே இவற்றை வலியுறுத்துவார்.

நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !

நல்வாழ்த்துக்கள் இளம் பிள்ளைகளே !

வாழிய பாரத மணித்திருநாடு !


Saturday, 23 May 2020

Dear Young Parents.. Just for You

    வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

அன்பானவர்களுக்கு                    வணக்கங்கள் !   


              To all parents 

     There was a very brilliant boy, he always scored 100% in Science.

Got Selected for IIT Madras and scored excellent in IIT.

Went to the University of California for MBA.

Got a high paying job in America and settled there.

Married a Beautiful Tamil Girl.

Bought a 5 room big house and luxury cars.

He had everything that make him successful but a few years ago he committed suicide after shooting his wife and children.

*WHAT WENT WRONG?*

   California Institute of Clinical Psychology Studied his case and found “what went wrong?”

    The researcher met the boy's friends and family and found that he lost his job due to America’s economic crisis and he had to sit without a job for a long time. After even reducing his previous salary amount, he didn't get any job. Then his house installment broke and he and his family lost the home. they survived a few months with less money and then he and his wife together decided to commit suicide. He first shot his wife and children and then shot himself.

  The case concluded that the man was Programmed for success but he was not trained for handling failures.

  Now let's come to the actual question, What are the habits of highly successful people?

  First of all, there are many people who will tell you about success habits but today I want to tell you that even if you have achieved everything, yet there is a chance to lose everything, nobody knows when the next economic crisis will hit the world. The best success habit according to me is getting trained for handling failures.

  I also request every parent, please not only program your child to be successful but teach them how to handle failures and also teach them proper lessons about life. Learning high-level science and maths will help them to clear competitive exams but a knowledge about life will help them to face every problem. Teach them about how money works instead of teaching them to work for money. Help them in finding their passion because these degrees will not help them in the next economic crisis and we don’t know when the next crisis will hit the world.

*"Success is a lousy teacher. Failure teaches you more."*

Good read. This post is not mine. Just forwarded it , thought it to be worth reading.🙏

    Dear young Parents..

Please think: Right from Thomas Alwa Edison..Up to Jack Ma..

No Scholar..No Doctor.. No Scientist..No Teacher..No Political Leader..No Sportsman taste the Victory in the Very First Attempt !

   Why ? Anyone could tell you i ride my bicycle very well even in my First attempt ?

  Have in mind this and shape the siblings accordingly.

    Because in School and College we learn the lesson first and write the Exam at the End.

     But..Dear Children.. Life conducts the Exam first : make us Understand the Lesson at the end.

   ALL THE BEST CHILDREN !

Tuesday, 19 May 2020

இரத்தச் சர்க்கரையைக் குறைக்க.. நிலைப்படுத்த

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே ! 
    அன்பானவர்களுக்கு வணங்கங்கள் !
     இரத்தச் சர்க்கரையைக் குறைக்க… நிலைப்படுத்த..

தேவையான பொருட்கள் 

வெந்தயம் - 1 பங்கு
கருவேப்பிலைப் பொடி - ½ பங்கு
மஞ்சள் தூள் - 1/4 பங்கு
பட்டை (குருமாவுக்குப் போடுவது) - ஒரு சிறிய துண்டு.

    செய்முறை :
வெந்தயத்தையும் பட்டைத் துண்டையும் போட்டு மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டவும்.
வெந்தயம் சற்றே பொடிபட வேண்டும். அவ்வளவுதான்.
      ஓட்டிய இந்தக் கலவையுடன் கருவேப்பிலை மற்றும் மஞ்சள் தூளையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.
     மிக்ஸியில் ஓட்டியதினால் சற்றே சூடு இருக்கும்.
     நன்கு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது.
    காலை..மதியம்.. இரவு உணவுக்குப் பின் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வரவும். இந்தப் பொடியைச் சாப்பிடும் போது புரையேறி விடாமல் மெதுவாக உமிழ்நீருடன் கலந்து முழுங்கவும்.

   இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் :
1.விரலி மஞ்சளை வாங்கி அரைக்கவும். கடையில் விற்கும் பொடி பயன்படுத்தக் கூடாது.

2.இந்தப் பொடியை எடுக்கும் முன் ஒரு சுகர் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.

3.கறிவேப்பிலைப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அல்லது நீங்களே வீட்டிலும் தயாரித்துக் கொள்ளலாம்.
வீட்டில் தயாரித்தால் கறிவேப்பிலை இலைகளை நன்கு கழுவி.. நிழலில் உலர்த்தி…ஈரப்பதம் முற்றிலும் நீங்கி மொறுமொறுவென்று காய்ந்து விட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.. இல்லை என்றால் பூஞ்சக்காளான் பூக்க வாய்ப்புண்டு…கவனம் !

4.நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆங்கில முறை மாத்திரைகளை நிறுத்தக் கூடாது. அதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ அப்படியே தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

3 - 6 மாதங்களில் அவரவர் வயது..உணவுப்பழக்கம்.. மற்ற நோய் ஏதும் இருந்தால் அவற்றைப் பொறுத்து நல்ல பலன் கிடைக்கும். இது அனுபவ உண்மை.

நல்ல பலன் கிடைக்கத் துவங்கியதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆங்கில முறை மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இந்தப் பொடி சாப்பிடுவதைத் தொடரலாம்.
இதில் உள்ள அனைத்துப் பொருட்களும் உணவுப் பொருட்கள் தான். அதனால் பக்க மற்றும் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் மிகவும் குறைவே !

இருப்பினும் ஒரு அடிப்படை விஷயத்தை மனதில் ஆழமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் ஒத்தக்கொள்ளாது.
அதனால் கொஞ்சமாக முதலில் தயாரித்துச் சாப்பிட்டுப் பார்த்து.. ஒத்துக்கொண்டால் மேற்கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பொடியை எடுத்துச் சொன்னது Dr.Prakash Chhaaliyil என்ற Bio Chemist.
அமெரிக்கா வாழ் இந்தியர்.
uni5sakthifoundation
           என்ற websiteல் நீங்கள்       இதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

என் கணவருக்கு 2012 ல் முதல் heart attack. அதைத் தொடர்ந்து 2013ல் சிறுநீரகத் தொற்று. அதன் பின் பதினைந்து முறைகளுக்கும் மேல் மருத்துவ மொழியில் procedures என்று சொல்லப்படும் சிறிய அறுவை சிகிச்சைகள். 2015ல் மீண்டும் heart attack . 
ஆனால் இத்தனைக்குப் பின்னும் அவருடைய இரத்த சர்க்கரை அளவு அதிகம் கூடவோ.. குறையவோ இல்லை. அதற்குக் காரணம் இந்தப் பொடி தான்.

எங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் என்று நிறையப் பேருக்கு இதைச் சொல்ல.. விடாது இதைப் பின்பற்றுவோருக்கு  சுகர் பற்றிய கவலையே இல்லை. நல்லபடியாக சீராக இருக்கிறது.
     நோயற்ற வாழ்வே
     குறைவற்ற செல்வம் !
         நல்வாழ்த்துக்கள் !

To control Diabetics i.e.Blood Sugar.


Ingredients:

1.Fenugreek (வெந்தயம்) - 1 unit

2.Curry leaves Powder- 1/2 unit

3.Turmeric Powder -1/4 unit

4.Cinnamon piece (பட்டை - மசாலாவில் பயன்படுத்தப்படுவது) - 3- 4 inch piece i.e. (ஒரு சிறு துண்டு)


Preparation:

1) Course Grind Fenugreek with Cinnamon (i.e. operate the mixie just 1 or 2 rotations only..If u grind more fenugreek will be ground to a flour stage which will difficult to swallow..Pl have this in mind.)

2) Turmeric powder should be home made only. This is also a must one.

3) Mix all well and store in a Glass Bottle only. This is also a rigid rule to have in mind.

Take 1tsp.of this mixture after Breakfast.. Lunch and Dinner.

 Pl take a blood test b4 starting to consume this powder.

Continue to take this atleast for 5-6 months. 

If u r taking any allopathic medicine for controlling sugar.. Pl DON'T STOP IT.

Fenugreek.. Turmeric etc.r our routine food items only which never create any side or after effects.

   Even then , pl.have in mind Always , everything won't suit everybody.

So prepare a little quantity.. consume..If u feel Good.. Continue.

But this sugar mixture prooved to control blood sugar.

    U should buy Turmeric sticks and make the powder. Never use the turmeric powder bought from shops.This is very very important !

   This is the recommendation of one organization called Unii5 sakthi foundation.

U could visit at www.uni5sakthifoundation.org

                  

அஸ்வகந்தா லேகியம்

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
      அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !

      அஸ்வகந்தா லேகியம்

        

   அஸ்வகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்துகள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

    ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

அஸ்வகந்தா லேகியத்தை 5 வயது முடிந்த குழந்தைகள் முதல் (கட்டாயம் 5 வயது முடிந்திருக்க வேண்டும்) பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் காலையில் ஒரு சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

எங்கள் நண்பர்கள் 3 பேர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மேல்நிலைப் பட்டங்கள் பெற்றவர்கள். மிகுந்த அனுபவசாலிகள் ! அவர்களின் அறிவுரையின்படி நாங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும்  அந்த மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி அஸ்வகந்தா லேகியத்தைக் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுத்து வருகிறோம். அவ்வப்போது ஓரிரு மாதங்கள் இடையில் நிறுத்தி மீண்டும் தொடரச் சொல்வார்கள் அந்த மருத்துவ நண்பர்கள்..

நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் இந்த லேகியம்.. நரம்பு தொடர்பான கோளாறுகளையும் சரிசெய்து விடுகிறது என்பது எங்கள் அனுபவம். 

    நமது பாரம்பரியமான 

" உணவே மருந்து..

மருந்தே உணவு " என்ற கொள்கை நிலைக்கு நாம் முழுவதும் திரும்பிவிட்டாலே நாம் நமது

 " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்ற அருமையான ஆரோக்கிய நிலையை அடைந்து விடலாம் அன்பு நண்பர்களே !

நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !

         இந்தப் பதிவைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை எனது blogல் உள்ள Post comment பகுதியில் தயவுசெய்து தெரிவிக்கவும்.

நன்றிகள் நண்பர்களே !


புலம்பெயர் மனிதர்கள்..

    வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
        அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !
        தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடினர். அப்படியே அங்கங்கே நிரந்தரமாக வாழவும் தொடங்கி விட்டனர். பர்மா.. சிங்கப்பூர்.. மலேசியா.. தாய்லாந்து.. இலங்கை.. மொரீசியஸ்..தென்னாப்பிரிக்கா - இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

     தமிழர்கள் மட்டுமல்ல.. உலக வரலாற்றில் டச்சுக்காரர்கள் போர்த்துகீசியர்கள்...இப்படி எத்தனை எத்தனையோ நாட்டுக்காரர்கள் கடலோடி வாணிபம் செய்தனர்.. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாடு பிடித்தனர். சிலர் மட்டுமே சொந்த நாடு திரும்பினர். பலர் அப்படி அப்படியே.. வந்த இடத்திலேயே வாழத் தொடங்கி விட்டனர்.

    ஒரு கட்டம் வரையில்.. எல்லாம் அமைதியாகப் போகும் வரையில் பிரச்னைகள் இல்லை. எங்கோ ஒரு சின்ன வில்லங்கம் ஏற்படும் போது கொளுத்திப் போட்டப் பட்டாசுகளாக நிலமை மாறிப் போய்விடுகிறது.. வாழ்வாதாரம் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டு அகதிகளாகப் புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர்.

எத்தனை நிகழ்வுகள் உலக வரலாற்றில்..

நவீன காலத்திலும் இதேதான் நிலைமை..

அதனால் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்வோர் ஒரு கட்டத்தில் போதுமென்ற மனதோடு தாயகம் திரும்புவதுதான் உத்தமம் !

உணர்ந்தால் உய்வுண்டு நண்பர்களே !

       இந்தப் பதிவைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை blog.ல் உள்ள    Post Comment பகுதியில் தயவுசெய்து பலிவிடவும்.

        நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

Saturday, 16 May 2020

புலம்பெயர் தொழிலாளர்கள்

        அப்..பா...எம்முட்டுத் தூரம் நடக்கறது..முடியல்லே… ஆனா நடந்து தான் ஆகணும்..

     இங்க வேலைக்குன்னு வந்தப்பக் கொஞ்சம் பயம் இருந்தாலும்… சமாளிச்சிடலாம்னு தான் நெனச்சேன்…

      கெடச்ச மொதலாளியும் பரவால்ல…ஓரளவு தன்மையாத்தான் இருக்காரு...சாப்பாடு.. இருக்க எடம் தந்துட்டாரு...கெடக்கிற சம்பளத்துல.. டீ..அப்புறம் பீடி செலவு போக அப்படியே பல்லக் கடிச்சிக்கிட்டு..கொஞ்சம் கொஞ்சமாச் சேத்து…ஒவ்வொரு வாட்டி ஊருக்குப் போகும் போதும் பத்தாயிரம்…பதினையாயிரம்னு கொண்டு வீட்ல கொடுக்கும்போது ராஜ உபசாரந்தான்…

     இப்படி ஏழெட்டு வருஷம் ஓட்டிட்டேன்... என்னதான் கஷ்டமாக இருந்தாலும் நம்ம குடும்பத்து ஆட்கள் சந்தோஷப்படும் போது..அதுல ஒரு சொல்ல முடியாத சொகமும்.. நிம்மதியும் இருக்கத்தான செய்யுது..?

     ஆனாக்க இந்த வாட்டி அப்படியில்லே…

       திடீர்னு கொரோனான்னு ஒண்ணு வந்து ஓவர் நைட்ல பூகம்பம் பொரட்டிப் போட்டா மாதிரி எல்லாம் அப்படியே மாறிப்போச்சு.. திடீர்னு கம்பெனிய மூடிட்டாங்க.. என்னவோ லாக்டவுன்னாங்க.. நாலு நாள் கூடச் சமாளிக்க முடியல்லே… வீட்டு ஓனர் வீட்டக் காலி பண்ணச் சொல்றாங்க.. பொண்டு புள்ளகள வச்சுருக்கறவங்க தவிச்சுப் போய்ட்டாங்க…நல்லவேள.. எனக்குக் கல்யாணம் ஆகல..

      எங்க போய்த் தங்கறதுன்னு ஒருபக்கம் அலமோதுனா...சாப்பிட ஒரு டீக்கட கூட இல்ல…

     மவராசங்க… யார் யாரோ சாப்பாடு குடுக்கறாங்க..

     ஆனா இதெல்லாம் எத்தினி நாளைக்கு நடக்கும்…?

     எங்களப் போன்ற எல்லாருமா

சேந்து பேசி முடிவெடுத்து நடக்க ஆரம்பிச்சோம்…

     சில பேர்ட்ட சைக்கிள் இருந்துச்சு…அதுல பச்சப்பிள்ளைங்க...புள்ளத்தாச்சி பொம்பளகள ஒக்காரவச்சு ஓட்டிக்கிட்டு வந்தாங்க…வழில போலீஸ்காரங்க கேள்வி மேலக் கேள்வி கேப்பாங்க… அப்புறம் அவுங்களே பாவம்னு விட்ருவாங்க..

      இப்படிப் பத்து நாள் நடந்தாச்சு.. இப்ப முடியலே…வலிக்குது காலு...ஒடம்பு…மனசு எல்லாம்.. ஊர்போய் எப்படா சேர்வம்னு இருக்கு…

      இதுல கையில இருக்குற கொஞ்சப் பணமும் கரையுதேங்குற கவல… அதுக்காகத் தண்ணியத்தான் அதிகமாக் குடிச்சுக்கிறேன்…

     இதுல இன்னிக்கு ஒரு டீக்கடைல டீக்குடிக்க நின்னப்ப டிவில ஒண்ணு பாத்தேன்…எங்கள மாதிரி வெளி நாட்டுல வேல செய்ற தொழிலாளர்களக் கூட்டியாரக் கவர்ன்மெண்ட்டு ஏராப்ளேன் ஏற்பாடு செய்யுதாம்...அப்ப ஏன் அதே கவர்ன்மெண்ட்டு நம்ம நாட்டுக்குள்ளேயே ஊருவிட்டு ஊரு வந்து வேல செய்ற எங்களக் கண்டுக்கல… நாங்களும் ஒழையா ஒழச்சுக் கவர்ன்மெண்ட்டுக்குப் பல வகையில ஒதவுறமுல்ல…? 

     ஆனா அவுங்களும் பாவந்தான்.. இந்த நோயி புரியாத புதிரா இருக்குதாம்...அதோடப் போராடத்தான் இந்த…அது என்னது… லாக்டவுனாம்…

ஆனாலும் மனசு அடங்கல… எங்களயும் அவுங்க வேலையோட வேலையாக் கொஞ்சம் கவனிச்சிருக்கணும்..ஒதவியிருக்கணும்...தங்கறதுக்காவது ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கணும்…

இஸ்கோலு...காலேஜு...கல்யாண மண்டபங்கள் இப்படி எத்தன இருக்கு ? அதுல தங்கவாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாமுல்ல…

அட...ஒரு நாலஞ்சு… நாலஞ்சு மொதலாளிகளாச் சேர்ந்தாவது எங்களுக்கு ஒரு ஒதவி செஞ்சுருக்கலாமுல்ல...அவுகளுக்குத் தானே நாங்க ராவாப்பகலாப் பாடுபட்டோம்…

    பெரீய மொதலாளிகள்ளாம் சேர்ந்து ஒரு சங்கம் வச்சுருக்காங்களே…அது இன்னாது….ஆங்...லயன்ஸ் கிளப்பு...ரோட்டரி…அப்டீன்னெல்லாம்….அதுங்க மூலம் எங்களுக்கு ஏதாவது செஞ்சகருக்கலாமில்லே...ஒண்ணஞ் செய்யல

    இன்னிக்குக் காலைல பாத்தீங்கன்னா எங்களோட நடந்து வந்த ஒரு புள்ளைக்குப் பிரசவ வலி வந்து… புள்ளையே பொறந்துருச்சு…

      எல்லாரும்

பதறிப்போய்ட்டோம்…  கொஞ்ச நேரம்… ஆள் நடமாட்டமே இல்லாத… நாங்க ஒரு பத்து..இருபது பேர் மட்டுமே நடந்து போய்க்கொண்டு இருக்கறப்ப இப்படி நடந்தா…? 

     வெலவெலன்னு ஆயிருச்சுங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு ஒவ்வொருத்தரா நடக்க ஆரம்பிக்க அந்தப்பொண்ணும் தட்டுத்தடுமாறி கையில பச்ச மண்ணோட நடக்க ஆரம்பிச்சுருச்சு…

      இது என்னடா கடவுளோட சோதனைன்னு….ஆங்….அய்யோ...கல்லு ஏதோ தடுக்கீறுச்சு… விழுந்துட்டேன்.. பக்கத்துல இருந்த ஒரு பெரிய கல்லுல மண்ட பட்டு ரத்தம் ஆறா ஒழுகுது...கூட இருந்தவங்களும் பதறி ஓடி வ...ரா...ங்..க.. எனக்கு நென..வு தப்...புது...மயக்கமா இருக்கு..! அப்...படி..யே…

   சுத்தி நிக்கிறவங்க பேசுறது லே….சாக் காதுல விழுது… 

    " அடி பலம்மா..இருக்கு.. நம்ப முடியாது… இப்ப என்னா பண்றது…"

     அதுக்கு மேல ஒண்ணுமே வெளங்கலே எனக்கு…

     ' ஐய்யோ…எம்பணம்...எங்க வீட்டுக்காக நானு கஷ்டப்பட்டுச்

சம்பாதிச்ச பணம்..'

     என் முன்னாடி ஒரே இருட்ட்ட்ட்டா…..

  

         இது கதையல்ல…இன்று நமது பாரதத் திருநாட்டில் நடக்கும் நடப்பு….மிகமிக மிகமிக மிகமிக வேதனை ஏற்படுத்தும் நடப்பு ..

    மீண்டும் ஒரு மிகப்பழையக் கேள்வி ஒன்று நிற்கிறது என் முன்..

     " இந்த உலகம் வசதியானவர்களுக்கு மட்டுந்தானா ????? "

    


Thursday, 14 May 2020

சட்டென்று யாரையும் மதிப்பிட வேண்டாம்...


வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !

இன்று நான் படித்த ஒரு குட்டிக் கதையை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.

பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,

கால் தடுக்கிக் கீழே விழ ,

கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் சாக்கடையில் விழுந்தன.

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான். 

அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,

 " இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்துக் கொடுக்க முடியுமா......??எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!

அதற்கு வழிப்போக்கன் 

" இதுதான் உங்கள் பிரச்னையா.... ? அந்தச் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் அதைவிடச் சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!

மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள்...!! வண்டியை ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்.

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது.......!!!

நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும், இந்தச் சுலபமான வழி புலப்படாமல் போனதே.........!!!இவரைப்போய்க் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ... ! என்று தலை குனிந்தார் விஞ்ஞானி......!

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.........!!!!!!!

உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு.........!!!!!

நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!!

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!

 எவ்வளவு உண்மை... யோசியுங்கள் நண்பர்களே ! இதைத்தான் நமது பெரியவர்கள் " துரும்பும் பல் குத்த உதவும் " என்றார்கள்.

உடை அழகாக இருப்பது போல் உள்ளமும் அழகாக இருப்பவர் தாம் மனிதர்கள் !

நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !


தங்களின் மனதில் இதைப் படித்ததும் தோன்றும் எண்ணங்களைப் blogல் உள்ள Post comment பகுதியில் பகிருங்கள்..


Wednesday, 13 May 2020

உழைப்பு... உழைப்பாளர்கள்

வல்லமை தாராயோ.. இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

  அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !
    இத ஆங்கில வருட முறைப்படி மே மாதம். மே மாதம் ஒன்றாம் தேதியை " உழைப்பாளர் தினம் " என்று உலகளவில் கொண்டாடுகிறோம் உடலுழைப்பு நல்கும் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக. நல்லது.
   ஆனால் இன்றைய யதார்த்தம்.. உடலுழைப்புத் தொழிலாளர்கள்... அதிலும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் கொரோனாவை ஒட்டிய தடைவிதிப்பால் வேலைகளை இழந்து.. தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படி எப்படியோ திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள் மிகவும் உடல் மற்றும் மனக் கஷ்டங்களுடன்..
இது மிகவும் வேதனையைத் தருகிறது.
    சில மாதங்கள் முன்பு வரை வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழகத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொண்டு விட்டனர் என்று கூக்குரல் போட்டுக்கொண்டு இருந்தனர் சில அரசியல் கட்சிகளும்.. "தன்னார்வலர்கள்" என்று சொல்லிக் கொண்டு இருந்த சிலரும்..
     இந்த நேரத்தில் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க எண்ணுகிறேன்.
    கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மதுக்கடைகளைத் திறந்து உடல் உழைப்பாளர்களான வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் மற்றும் கீழ் நடுத்தர.. மேல் நடுத்தர மக்களைக் குடிக்கு அடிமைகளாக்கி விட்டு..
அரசியல் சுய லாபத்திற்காக.. வாக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக பலப்பல இலவசங்களுக்கும் அடிமையாக்கி விட்டு..(அந்த இலவசங்கள் சில நாட்களிலையே காயாலாங்கடைகளுக்கு வந்து விடுகின்றன என்பது இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் )
" வேலை இல்லாத் திண்டாட்டம்.. தமிழகத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை " என்று கூக்குரல் போடுபவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள் அல்லது மறந்தது போல் நடிக்கிறார்கள்.
    நூறு நாள் வேலைத்திட்டம்.. மகளிர் சுய உதவிக் குழு போன்றவை அருமையான திட்டங்கள் ! 
   இதில் வளமைபோல் நூறு நாள் வேலைத்திட்டம் கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
அதிலும் கமிஷன்.. உள் கமிஷன்... உள் உள் கமிஷன் என்று பல்வேறு கட்டங்கள் .
யார் யார் அந்த மேஸ்திரியைத் தினமும் " கவனிக்கிறார்களோ "அவர்கள் காலை 11 மணிக்கு மேல் வந்து விட்டு மதியம் 3 மணிக்குக் காசை வாங்கிக்கொண்டு (மேஸ்திரிக்கு வெட்ட வேண்டியதை வெட்டி விட்டுத்தான்) நேராக டாஸ்மாக் கடைக்குப் போய்விட்டு.. ஒன்று சாலையில் விழுந்து கிடக்கிறார்கள்.. அல்லது வீட்டுக்குப் போய் ரகளை பண்ணுகிறார்கள். 
  இவர்கள் வீட்டுப் பெண்கள் பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகள்.. பண்டிகைகள் போன்றவற்றிற்கு மகளிர் சுய உதவிக் குழு வழங்கும் கடனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்... " அந்தத் திட்டம் மூலம் நாம் ஏதாவது சிறு தொழில் செய்து முன்னேறலாம் " என்பதை அடியோடு மறந்து விட்டு...
     இந்த நிலைக்கு யார் காரணம் ?
     இலவசங்களுக்கு அடிமையான மக்களா ?
    இலவசங்களைத் தாங்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து கொஞ்சம் தூக்கி எறிந்தால் போதும்..இந்த மக்களை வெகு எளிதாக ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நினைப்பில் திளைத்துப் போயிருக்கும் தமிழக திராவிடக் கட்சிகளா ?
      இதைப் படிப்பவர்கள் இந்த blogன் Post comment பகுதியில் தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
     வாருங்கள்... அருமை நண்பர்களே ! நமது தமிழகத்தை நல்ல தமிழகமாக மாற்ற நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.
     அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
       

Tuesday, 12 May 2020

தப்புக்குத் தண்டனை நிச்சயம் உண்டு !

நாம் இன்னா செய்தது எல்லாம் வல்ல ஆண்டவனின் பிற படைப்பினங்களான மரம் செடி கொடிகள்.. தாவரங்கள்.. விலங்குகள்.. பறவைகள்.. இவைகளின் வசிப்பிடங்களான மலைகள்.. காடுகள்.. ஆறுகள்.. குளங்கள்.. இப்படி..

Dodo Birds என்று கூகுளில் தேடிப்பாருங்கள் நண்பர்களே. மொரீசியஸ் தீவுகளில் வசித்த அவற்றைப் போர்ச்சுகீஸியர்களும்..பின்னர் டச்சுக்காரர்களும் எப்படி அவற்றை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தினார்கள்...வெளியுலகத்திற்கு அறிமுகமான 150 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக அவை எப்படி அழிந்து போயின என்று தெரியவரும்.

இப்போது நாம் பாதிக்கப்படும் போது கதறுகிறோம்.. அலறுகிறோம்.. பயப்படுகிறோம்..அதுவும் நமது மனிதன் ஒருவனே உலகையாளும் பேராசையால் உருவாக்கி உலாவிட்ட ஒரு கிருமியால்..

இது எந்த வகையில் நியாயம் நண்பர்களே ???

   தப்புகள் முழுவதும் நம் மனித குலத்தால் செய்யப்பட்டவை நண்பரே. மொழி பேச முடியா தாவர.. விலங்கு மற்றும் பறவை இனங்களை மொத்த மொத்தமாக அழித்தோம்.

     சில மாதங்களுக்கு முன் அமேசான் காட்டுத்தீ எத்தனை உயிர்களைக் கதறக்கதறத் தாக்கி அழித்திருக்கும் ? அந்த அப்பாவி உயிரினங்களின் இறுதி கட்டக் கூக்குரல் உங்கள் காதில் விழவில்லை ?

     அந்தப் " பாவம் " இப்போது மொத்தமாக நம்மைக் குறிவைத்து வந்திருக்கிறது.

    நமக்கு ஆபத்து என்றதும் "குய்யோ முறையோ' என்று பதறுகிறோம்.. கதறுகிறோம்..

இது நியாயமா நண்பர்களே ?

     இதைப் படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை Post comment sectionல் எழுதும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

               


 


நவீன மருத்துவம் என்பது இதுதான் !

        வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
          அன்பானவர்களுக்கு வணக்கங்கள்!
        ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள். அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.அப்போ .. தேவையையும்  செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?...
                   
      சில தினங்களுக்கு முன் நான் படித்தது இக்கட்டுரை.
               " நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல் " என்றார் திருவள்ளுவர். இந்த முறை அறவே இல்லாத ஆங்கில மருத்துவம்...அதன் மூலம் சில குறிப்பிட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டாலர்களில் கொழிக்கின்றன. 
        எங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சித்த மருத்துவர் ( பைசாவுக்கு ஆசைப்படாத மனிதர்) கூறுவார் : ஒரு நோய்க்கு ஒரு மருந்து கொடுத்தால் குறிப்பிட்ட காலவரையறைக்குள் குணமாக வேண்டும்... அதுதான் மருந்து... அதற்குப் பேர்தான் மருத்துவம் " எவ்வளவு உண்மை.. !உணருங்கள் தோழர்களே..இளம் பிள்ளைகளே. 
        இளம் பெற்றோருக்கு ஒரு பணிவான விண்ணப்பம் : 
     உங்கள் குழந்தைகளுக்குக் கூடுமானவரை வீட்டில் சமைத்த உணவுகளையே கொடுங்கள்.. கொடுக்கும் போது அந்த உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை அவர்களுக்குப் புரியும்படி விளையாட்டாக எடுத்துக் கூறுங்கள். அவர்கள் அதிபுத்திசாலிகள்... கட்டாயம் புரிந்து கொள்வார்கள்.
     இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் விரும்பும் வெளி உணவுகளை வாங்கிக் கொடுங்கள்... தப்பில்லை... நீங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் நண்பர்கள் கொண்டு வருவதைச் சாப்பிட ஆசைப்படுவார்கள். சாப்பிடவும் செய்வார்கள்... ஆனால் உங்களிடம் மறைப்பார்கள்.. அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.        எந்த விஷயத்தையும் அவர்களிடம் மனம் விட்டு அவர்களுக்குப் புரிகிற மாதிரி பேசுங்கள்... கட்டாயம் புரிந்து கொள்வார்கள்...
       நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டும் வளர்க்கவில்லை... எதிர்கால பாரதத்தை வளர்க்கிறீர்கள்..
     நாளைய நமது நாட்டின் அடிப்படை அஸ்திவாரமும் அவர்கள்தான்... தூண்களும் அவர்கள்தான்.
மனதில் கொள்ளுங்கள் பிள்ளைகளா !
       " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த
நாடே இருக்குது தம்பி !
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு
 சரித்திரம் இருக்குது தம்பி " 
       நல்வாழ்த்துக்கள் அன்புப் பிள்ளைகளா !
        நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் Post comment sectionல் தவறாமல் பதிவிடுங்கள் கண்மணிகளா !
      

Monday, 11 May 2020

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
அன்பானவர்களுக்கு வணக்கங்கள் . 
கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி இன்று உலகத்தின் 90 % நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை ஏனென்று ஒரு நொடி நின்று யோசித்துப் பாருங்களேன்...

" கோழிக்கும்.. அணிலுக்கும்.. குருவிக்கும் இங்கே கொரோனா பயமில்லையே !
கோடியில் காசு சேர்க்கும் மனிதரைக் கொரோனா விடவில்லையே !
ஏனென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள் எந்தன் தோழர்களே !
இயற்கையைவிட்டு விலகி வந்ததன் பலனிது தோழர்களே.."

    இறைவன் அந்தந்தப் பகுதிகளில் அந்தந்த உயிரினங்களுக்குத் ( நன்றாகக் கவனிக்கவும்...மனிதர்களுக்கு மட்டுமில்லை....உயிரினங்கள் அனைத்திற்கும் ) தேவையானவற்றை உணவே மருந்தாகவும்... மருந்தே உணவாகவும் படைத்து அளித்துள்ளான். ஆனால் நாம் அதைவிடுத்து... அன்றாட உணவு... உடை...வாழ்க்கை முறை - இப்படி அனைத்தையும் 
" நாகரீகம் " என்ற பெயரில் தாறுமாறாகப் பின்பற்ற முனைந்து... அவை ஒவ்வாமல்... அது நமக்குப் பொருந்தவில்லை என்று அறிந்தும் வரட்டுக் கௌரவத்திற்காகவும்... நாலு பேர் நம்மைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு போலி மகிழ்ச்சிக்காகவும் வாழப்போய் இன்று " உள்ளதும் போச்சுடா.. நொள்ளக் கண்ணான்"னு இன்று நமது அருமையான உடல் மற்றும் உள்ள நலன்களை இழந்து தவிக்கிறோம். 

    நோய் எதிர்ப்பு சக்தியே மாபெரும் மருந்து. அதை வளர்க்க... நிலைபெறச் செய்ய நமது அஞ்சரைப்பட்டியே போதுமானது. இஞ்சியும்.. சுக்கும்..எலுமிச்சையும்.. மஞ்சளுமே ஆகப்பெரிய கிருமி நாசினிகள் என்று நமது வணக்கத்திற்குரிய சித்தர்கள் என்றோ எழுதி வைத்துவிட்டுப் போனது... இன்றும் தம்மை நிரூபிக்கின்றன உலகம் முழுவதும் ! இதைவிடப் பெரிய விஷயம் இன்றைய கொரோனா காலகட்டத்தில் என்ன உள்ளது நண்பர்களே... இளைஞர்களே... இளம் அன்னையர்களே ?
        தயவுசெய்து இளம் அன்னையர்கள் நமது பிள்ளைகளுக்கு நமது நாட்டின் பாரம்பரிய உணவு.. உடை மற்றும் உயர்ந்த நடைமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டுகிறேன்.
  சிந்தியுங்கள்... சிறப்புடன் வாழத் துவங்குங்கள்..!
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் கண்மணிகளா !
   வாழ்க தமிழகம் !
   வாழிய பாரத மணித்திருநாடு !